Published : 09 Aug 2025 05:34 AM
Last Updated : 09 Aug 2025 05:34 AM

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நீட்டிப்பா? - ஆக.13-ம் தேதி திமுக முடிவு

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்க்கை ஆக.11-ம் தேதி​யுடன் முடிவடைய உள்ள நிலை​யில், அதுகுறித்து விவாதிக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம் ஆக.13-ம் தேதி நடை​பெறுகிறது.

வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக உறுப்​பினர்​களாக்​கும் வகை​யில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற உறுப்​பினர் சேர்க்கை முன்​னெடுப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார்.

அதைத்​தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் வீடு​வீ​டாக உறுப்​பினர் சேர்க்கை பணி​களைத் தொடங்கி வைத்​தார். இதற்​காக உரு​வாக்​கப்​பட்ட பிரத்​யேக செயலி வாயி​லாக விருப்​ப​முள்​ளவர்​களை திமுக உறுப்​பினர்​களாக்​கும் பணிகளை மேற்​கொள்ள கட்​சி​யினருக்கு அறி​வுறுத்​தப்​பட்​டது.

இந்நிலையில், ஆக.11-ம் தேதி​யுடன் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்க்கை முடிவடைகிறது. எனவே, இம்​முன்​னெடுப்பை தொடர்ந்து செயல்​படுத்​து​வது தொடர்​பாக ஆலோ​சனை நடத்த, திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில், ஆக.13-ம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் நடை​பெறுகிறது.

இதற்​கான அறி​விப்பை பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் நேற்று வெளி​யிட்​டுள்​ளார். மேலும், இக்​கூட்​டத்​தில் ‘உடன் பிறப்​பே’ வா சந்​திப்பு தொடர்​பாகவும் விவா​திக்​கப்பட உள்​ளது. இதற்​கிடையே, உடன்பிறப்பே வா நிகழ்வின் மூலம் நேற்று மதுரை மேற்கு சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட நகர, ஒன்​றிய, பேரூர் நிர்​வாகி​களை முதல்வர் ஸ்டாலின் சந்​தித்​தார். அப்​போது தொகுதி நில​வரம் குறித்து முதல்​வரிடம் நிர்வாகிகள் விளக்​கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x