Published : 09 Aug 2025 05:22 AM
Last Updated : 09 Aug 2025 05:22 AM
சென்னை: மாநில கல்விக் கொள்கை குறித்து அதன் வடிவமைப்பு குழுவில் இடம்பெற்ற சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியது: அரசிடம் நாங்கள் சமர்ப்பித்து ஓராண்டு தாமதத்துக்கு பிறகு, தற்போது மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் அளித்த அறிக்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
நாங்கள் பரிந்துரை செய்யாத பல அம்சங்கள் இதில் உள்ளன. பெரிய அளவில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல், தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகள் என கிட்டத்தட்ட மானியக் கோரிக்கைபோல உள்ளது.
உயர்கல்வியை விட்டுவிட்டு, பள்ளிக்கல்விக்கு மட்டும் தனியாக கல்விக் கொள்கை வெளியிட்டதற்கான காரணமும் தெரியவில்லை. கல்விக் கொள்கை வடிவமைப்புக்காக தீவிரமாக உழைத்தும், எங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வெளியீட்டு விழாவுக்கு அழைக்கவும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளனர்.
இந்து தமிழ் திசை தலையங்கம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 2018-ம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 10, 11, 12-ம் வகுப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது.
இவற்றை கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டு மென கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டன.
இதுதொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழிலும் 2022 ஜன. 3-ம் தேதி செய்தியும் 2024 மே 23-ல் தலையங்கமும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT