Published : 08 Aug 2025 06:20 AM
Last Updated : 08 Aug 2025 06:20 AM

பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ துரை வைகோ: மல்லை சத்யா புகார்

சென்னை: மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மதி​முக​வில் ஏற்பட்​டுள்ள நிலை​மைக்கு நாங்​கள் காரணமல்ல. ரஷி​யா​வில் சிக்​கி​யுள்ள மருத்​துவ மாணவரை மீட்​ப​தற்​கான கோரிக்கை கடிதத்தில், எதிர்​நிலை​யில் இருக்​கும் பாஜக எம்​.பி.க்​களிடம் ஏன் கையெழுத்து பெற்​றார் என்​ப​தற்கு மதி​முக முதன்​மைச் செயலாளர் துரை வைகோ விடையளிக்க வேண்​டும்.

அவர் பாஜக​வின் ஸ்லீப்​பர் செல்​லாக தமிழகத்​தில் இருக்​கிறார் என்​பதை மீண்​டும் மீண்​டும் நிரூபித்​துக் கொண்​டிருக்​கிறார். மதிமுக வைகோ​வின் கட்​டுப்​பாட்​டில் இல்​லை. கருணாநி​தி​யின் இறுதி தரு​வா​யில் காலமெல்​லாம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்​கும் உறு​துணை​யாக இருப்​பேன் என்று அளித்த உத்​தர​வாதம் உண்​மை​யா​னால், பாஜக​விடம் கையெழுத்து பெற்​றது தவறு என ஏன் கண்​டிக்​க​வில்​லை.

வைகோவுக்கு திமுக கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும் என்ற விருப்​பம் இருக்​கலாம், ஆனால், துரைக்கு மத்​திய அமைச்​ச​ராக வேண்டும் என்ற விருப்​பம் இருக்​கும் காரணத்​தாலேயே அவர் பாஜக​விடம் நெருக்​கம் காட்​டு​கிறார். இது வெட்​கக் கேடு, தமிழக மக்கள் ஏற்​க​மாட்​டார்​கள். அண்ணா பிறந்​த​நாள் மாநாட்டை நாங்​கள் காஞ்​சிபுரத்​தில் நடத்​துகிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x