Published : 08 Aug 2025 04:46 AM
Last Updated : 08 Aug 2025 04:46 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுதினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சென்னை அண்ணா சாலையில் இருந்து அமைதி பேரணியாகச் சென்று மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். | படம்: எஸ்:சத்தியசீலன் |

சென்னை: ​திமுக தலை​வரும் முன்​னாள் முதல்​வரு​மான கருணாநி​தி, 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி காலமா​னார். அவரது 7-ம் ஆண்டு நினை​வு​ தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது.அதையொட்​டி, திமுக சென்னை மாவட்​டக் குழுக்​கள் சார்​பில் அண்​ணா சாலை​யில் நேற்று அமை​திப் பேரணிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், பேரணிக்கு தலைமை வகித்தார்.

முன்னதாக அண்​ணா​சாலை ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் கருணாநிதி சிலையின் கீழ் அலங்​கரித்து வைக்கப்​பட்​டிருந்த உருவப்படத்துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினார். அதைத்​தொடர்ந்​து, திமுக பொதுச்​செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான துரை​முரு​கன், துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தினர்.

பின்​னர், காலை 8.30 மணி​யள​வில் பேரணி தொடங்​கியது. முதல்​வர் ஸ்​டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் முன்னே செல்ல, நிர்​வாகி​கள், தொண்​டர்கள், பொது​மக்​கள் என ஆயிரக்​கணக்​கானோர் பின்​தொடர்ந்தனர்.

சுமார் 40 நிமிடங்​களில் மெரினா கடற்​கரை​யில் உள்ள கருணாநிதி நினை​விடத்தை பேரணி சென்​றடைந்​தது. நினைவிடத்​தில் மலர்​வளை​யம் வைத்தும், மலர் தூவி​யும் முதல்​வர் மரி​யாதை செலுத்​தி​னார். அதைத் தொடர்ந்து அருகே உள்ள அண்ணா நினை​விடத்​தி​லும் மரி​யாதை செலுத்​தினார்.

இந்நிகழ்​வில், துணை முதல்​வர் உதயநி​தி, கே.என்​.நேரு, எ.வ. வேலு, ஐ.பெரிய​சாமி, மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு உள்ளிட்ட அமைச்​சர்​கள், டி.ஆர்​.​பாலு, ஆ.ரா​சா, தயாநிதி மாறன் உள்​ளிட்ட எம்​.பி.,க்​கள், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் மாதவரம் எஸ்​.சுதர்​சனம், தாயகம் கவி உள்​ளிட்ட எம்​எல்​ஏ-க்​கள், முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, தமிழ்​ நாடு வீட்டு வசதி​வாரி​யத் தலை​வர் பூச்சி முரு​கன், மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார், திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்.எஸ்​.​பார​தி, செய்​தி தொடர்பு பிரிவு தலை​வர் டிகேஎஸ்​.இளங்கோவன் உள்​ளிட்டோர் பங்​கேற்​றனர்.

இதைத்​தொடர்ந்​து, முரசொலி அலு​வல​கம், கோ​பாலபுரம், சிஐடி காலனி இல்​லங்​களில் கருணாநி​தி​யின் உரு​வப்​படத்​துக்கு முதல்​வர்ஸ்​டா​லின் மரி​யாதை செலுத்​தினார். மேலும், ராஜாத்தி அம்​மாள், திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, கவிஞர் வைர​முத்து உள்​ளிட்​டோரும் நினைவிடத்தில் மரி​யாதை செலுத்​தினர். மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தலை​மை​யில் அமைதிப் பேரணி நடை​பெற்​றது.

புதுடெல்​லி​யில் உள்ள திமுக அலு​வல​கத்​தில் கருணாநி​தி​யின் உரு​வப்​படத்​துக்கு திருச்சி சிவா, திரு​மாவளவன், துரை ரவிக்குமார், கதிர் ஆனந்த், கனி​மொழி என்​.​வி.என்​.சோ​மு, துரை வைகோ உள்​ளிட்ட எம்​.பி.க்​கள் மலர்​தூவி மரி​யாதை செலுத்தினர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது சமூக வலைதள பக்​கத்​தில், “தி​முக தலை​வர் கலைஞர் முத்​து​வேலரும் அஞ்​சுகம் அம்​மை​யாரும் பூமிக்கு தந்த பிறப்​பு. பெரி​யாரும் முன்​னாள் முதல்​வர் அண்​ணா​வும் தமிழினத்​துக்​குத் தந்த நெருப்​பு. அவரது சாதனை​களால் சிறப்பு பெற்ற தமிழகத்​தைக் காத்து முன்​னேற்ற உறு​தி​யேற்​று, அவரது ஒளி​யில் ‘எல்​லார்க்​கும் எல்​லாம்’ – ‘எதி​லும் தமிழகம் முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்​றிப்​பாதை​யில் நடை​போடு​வோம்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x