Published : 07 Aug 2025 05:10 AM
Last Updated : 07 Aug 2025 05:10 AM

போர் விமான இயந்திர வடிவமைப்பு; உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் கோவை அமிர்தா பல்கலை. கணிதத்துறை உதவிப் பேராசிரியர் பொ.பிரகாஷுக்கு ‘அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு விருது’ மற்றும் ரூ.1 லட்சம் பொற்கிழியை வழங்கினார் வேலூர் விஐடி கல்வி நிறுவனங்களின் வேந்தர் கோ.விசுவநாதன். உடன், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர்.

ஈரோடு: ​போர் விமான இயந்​திரம் வடிவ​மைக்​கும் தொழில்​நுட்​பம் உலகில் 4 நாடு​களில் மட்​டும் உள்​ளது. இன்​னும் சில ஆண்டுகளில் இந்​தியா 5-வது நாடாக அதில் இடம்​பெறும் என்று ராணுவ விஞ்​ஞானி டில்​லி​பாபு கூறி​னார்.

தமிழக அரசு மற்​றும் மக்​கள் சிந்​தனைப் பேரவை சார்​பில் ஈரோட்​டில் புத்​தகத் திரு​விழா நடந்து வரு​கிறது. இதில், கணித ஆராய்ச்சி​யில் சிறந்த பங்​களிப்​புக்​காக கோவை அமிர்தா பல்​கலை. கணிதத் துறை உதவிப் பேராசிரியர் பொ.பிர​காஷுக்​கு, ‘அறி​வியல் மேதை ஜி.டி. நாயுடு விருது’ மற்​றும் ரூ.1 லட்​சம் பொற்​கிழி வழங்​கப்​பட்​டது.

விருதை வழங்கி வேலூர் விஐடி கல்வி நிறு​வனங்​களின் நிறு​வனர்- வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசி​ய​தாவது: வளர்ந்த நாடு​களில் 60 முதல் 100 சதவீதம் பேர் வரை உயர்​கல்வி பயிலும் நிலை​யில், இந்​தி​யா​வில் 28 சதவீதம் பேர்​தான் உயர்​கல்வி பயில்​கின்​றனர். உலகில் 22 நாடு​களில் உயர்​கல்வி வரை இலவச​மாக அளிக்​கப்​படு​கிறது.

40 நாடு​களில் 3-ல் ஒரு பங்கு தொகையை அரசு ஏற்​கிறது. மொத்த வரு​வா​யில் 6 சதவீதத்தை கல்விக்கு செல​வழிக்க வேண்​டும். ஆனால், நம் நாட்​டின் நிதி​நிலை அறிக்​கை​யில் கல்விக்கு 2.5 சதவீதம் மட்​டுமே ஒதுக்​கப்​படு​கிறது. எனினும், தமிழகத்​தில் 21 சதவீதம் கல்விக்கு செல​விடப்​படு​கிறது. இவ்​வாறு அவர் பேசினார்.

இந்​திய பாது​காப்​புத் துறையைச் சேர்ந்த ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லி​பாபு பேசி​ய​தாவது: ராணுவ ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு நிறு​வனத்​தின் (டிஆர்​டிஓ) 50 ஆய்​வுக்​கூடங்​கள் மூலம் விமானங்​கள், ஏவு​கணை, போர்க்​கப்​பல், நீர்​மூழ்கி கப்​பல் மற்​றும் தரை போர் வாக​னங்​களை விஞ்​ஞானிகள் உரு​வாக்கி வரு​கின்​றனர்.

சமீபத்​தில் எல்​லை​யில் நடந்த துல்​லிய பதிலடி தாக்​குதலில், நமது இந்​திய இளைஞர்​களின் தொழில்​நுட்​பத்​தில் உரு​வான ஏவுகணை மற்​றும் ஆயுதங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டது. போர் விமான இயந்​திரம் வடிவ​மைக்​கும் தொழில்​நுட்​பம் உலகில் 4 நாடுகளில் மட்​டும் உள்​ளது.

இன்​னும் சில ஆண்​டு​களில் இந்​தியா 5-வது நாடாக அதில் இடம்​பெறும். அந்த ஆராய்ச்​சி​யில் ஈடு​படும் விஞ்​ஞானிகள் குழு​வில், தமிழகத்​தைச் சார்ந்த நானும் இடம்​பெற்​றுள்​ளேன். எப்​போதும் வாசிப்​பதை நிறுத்​தி​விடக் கூடாது. புத்​தகங்​கள்​தான் என்னை வழிநடத்​தின. தமிழகத்​தில் சென்​னை, திருச்​சி, சேலம், ஓசூர், கோவை ஆகிய நகரங்​களை ஒருங்​கிணைத்து பாது​காப்பு தொழில்துறை தடம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கென உரு​வாக்​கப்​பட்​டுள்ள 69 நிறு​வனங்​களில் கடந்த பிப்​ர​வரி வரை ரூ.4,700 கோடி முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார். விழா​வில், கோபி துணை ஆட்​சி​யர் சிவானந்​தம், மக்​கள் சிந்​தனைப்பேர​வைத் தலை​வர் த.ஸ்​டா​லின் குணசேகரன், நந்தா கல்வி நிறுவனத் தலை​வர் வி.சண்​முகன் உள்​ளிட்​டோர் பங்கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x