Published : 07 Aug 2025 04:56 AM
Last Updated : 07 Aug 2025 04:56 AM

3 மாதமாக மசோதாவை நிலுவையில் வைத்த ஆளுநர் மீது வழக்குத் தொடர வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: கலைஞர் பல்​கலைக்​கழகம் அமைக்க சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்​துக்கு ஒப்​புதல் அளிக்​காமல் 3 மாதங்​களுக்கு மேல் நிலு​வை​யில் வைத்​திருந்த ஆளுநர் ஆர்​.என்​.ரவி மீது தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர வேண்​டும் என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஏப்​.28-ம் தேதி கும்​பகோணத்​தில் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் பல்​கலைக் கழகம் அமைக்​கப்​படும் என்ற சட்ட முன்​வடிவு நிறை வேற்​றப்​பட்​டு, ஆளுநரின் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டது.

இந்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்டு 3 மாதங்​களுக்கு மேலாகி​யும் தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி ஒப்​புதல் வழங்​காமல் தற்​போது குடியரசுத் தலை​வருக்கு அனுப்பிவைத்​திருப்​பது உச்​ச நீ​தி​மன்ற தீர்ப்பை அவம​திக்​கும் நடவடிக்​கை​யாகும். மசோ​தாவுக்கு ஒப்புதல் அளிக்க வலி​யுறுத்த ஆளுநரை சந்​திக்க நேரம் கேட்​டாலும் அனு​மதி கிடைக்​க​வில்​லை.

எனவே, மசோதா மீது முடி​வெடுக்க ஆளுநர்​கள் மற்​றும் குடியரசுத் தலை​வருக்கு உச்​சநீ​தி​மன்​றம் 3 மாதங்​கள் மட்​டுமே காலக்​கெடுவிதித்​திருந்​தது. இந்த கால தாமதம் மீறப்​பட்​ட​தால் தற்​போது தமிழக அரசு உச்​ச நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x