Published : 07 Aug 2025 04:45 AM
Last Updated : 07 Aug 2025 04:45 AM

அரசுத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தலாம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

புதுடெல்லி: தமிழக அரசின் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் பெயரை பயன்​படுத்த தடை கோரி வழக்கு தொடர்ந்த அதி​முக எம்​.பி. சி.​வி.சண்​முகத்​துக்கு ரூ.10 லட்​சம் அபராதம் விதித்​துள்ள உச்ச நீதி​மன்​றம், இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வை​யும் ரத்து செய்​துள்​ளது.

தமிழகத்​தில் அரசின் பல்​வேறு சேவை​கள் இல்​லங்​களை நேரடி​யாக சென்​றடை​யும் வகை​யில் உங்​களு​டன் ஸ்டா​லின் என்ற திட்ட​மும், மருத்​துவ சேவை​களை வழங்​கும் வித​மாக நலம் காக்​கும் ஸ்டா​லின் என்ற திட்​ட​மும் செயல்​பாட்​டில் உள்​ளது.

இந்த திட்டங்​களில் உள்ள முதல்​வர் ஸ்டா​லின் பெயரை நீக்​கக்​கோரி​யும், உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை அரசின் திட்​டங்​களில் பயன்​படுத்த தடை கோரி​யும் அதி​முக எம்​.பி. சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ஸ்டா​லின் படத்​தைப் பயன்​படுத்​தலாம். ஆனால் அவரது பெயரை பயன்​படுத்​தக் கூடாது என்று தடை விதித்​தது. இந்த தடையை நீக்​கக்​கோரி திமுக மற்​றும் தமிழக அரசு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிப​தி​கள் கே.​வினோத் சந்​திரன், என்​.​வி.அஞ்​சரய்யா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று நடந்​தது.

அப்​போது திமுக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, பி.​வில்​சன் ஆகியோ​ரும் தமிழக அரசு சார்​பில் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமனும் ஆஜராகி வாதிட்​டனர். அதையடுத்து நீதிப​தி​கள், அரசின் திட்​டங்​களுக்கு முதல்​வரின் பெயரை சூட்டக்​கூ​டாது என ஏற்​கெனவே உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில் எங்கு உள்​ளது.

அந்த தீர்ப்​பில் ஆளுநர்​கள் மற்​றும் அமைச்​சர்​களின் படங்​களை பயன்​படுத்​தும் வகை​யில் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. திட்டங்களுக்கு முதல்​வர் பெயரை வைப்​ப​தில் என்ன பிரச்​சினை என கேள்வி எழுப்​பினர். அப்​போது சி.​வி.சண்​முகம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் மனீந்​தர் சிங், பாலாஜி சீனி​வாசன் ஆகியோர், அரசின் திட்​டங்​களுக்கு உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை வைக்​கக் கூடாது என்​பது தேர்​தல் ஆணைய விதி​யாகும் என்​றனர்.

இதை ஏற்க மறுத்த நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசின் நலத்​திட்​டங்​களுக்கு எதி​ராக தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் அளித்த 3 நாட்​களுக்​குள் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடரப்​பட்டு இருப்​பது தவறானது. அந்தந்த கட்​சிகள் ஆட்​சிக்கு வரும்​போது தங்​களது தலை​வர்​கள் பெயர்​களில் திட்​டங்​களை தொடங்​கு​வது வழக்​க​மானது​தான். ஆனால் தற்​போது இந்த பொதுநல வழக்கு ஒரு அரசி​யல் கட்​சி​யை​யும், அதன் தலை​வரை​யும் குறி​வைத்து தொடரப்​பட்​டுள்​ளது.

பொதுநலனுடன் கூடிய அக்​கறை இருந்​திருந்​தால் இதற்கு முன்​பாக தொடங்​கப்​பட்ட மற்ற திட்​டங்​களை​யும் எதிர்த்து வழக்கு தொடர்ந்​திருக்க வேண்​டும். ஆனால் தற்​போது தொடரப்​பட்​டுள்ள இந்​தவழக்கு மனு​தா​ரரின் உண்​மை​யான நோக்​கம் என்ன என்பதை வெட்ட வெளிச்​சம் போட்டு காண்​பித்​துள்​ளது. அரசி​யல் ரீதியி​லான போராட்​டங்​கள் வாக்​காளர்​களுக்கு முன்​பாக நடக்கலாம்; நீதி​மன்​றங்​களில் கூடாது.

மேலும் தற்​போது தேர்​தல் நடத்தை விதி​களும் அமலில் இல்​லை. எனவே சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இதுதொடர்​பாக நிலுவையில் உள்ள வழக்கை தள்​ளு​படி செய்​து, சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வை​யும் ரத்து செய்​கிறோம். அதே போல பொதுநலன் என்ற பெயரில் உள்​நோக்​கத்​துடன் வழக்கு தொடர்ந்​துள்ள அதி​முக எம்​.பி. சி.​வி.சண்​முகத்​துக்கு ரூ.10 லட்​சம் அபராதம் விதிக்​கிறோம்.

இந்த அபராதத்தை அவர் ஒரு​வார காலத்​துக்​குள் தமிழக அரசிடம் செலுத்த வேண்​டும். மீறும்​பட்​சத்​தில் அவர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும். மனு​தா​ரர் செலுத்​தும் அபராத தொகையை தமிழக அரசு ஏழைகளுக்​கான திட்​டங்​களுக்​கு செல​விட வேண்​டும்​. இவ்​வாறு உத்​தரவிட்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x