Published : 06 Aug 2025 05:29 AM
Last Updated : 06 Aug 2025 05:29 AM

ரூ.28 கோடியில் கிளாம்பாக்கம் காவல் நிலையம், கூடுதல் பள்ளி கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ,18.26 கோடியில் சுட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். | படம்: எம்.முத்துகணேஷ் |

சென்னை: சிஎம்​டிஏ சார்​பில் ரூ.28 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள கிளாம்​பாக்​கம் காவல் நிலை​யம் மற்​றும் பெரம்​பூர் சென்னை மேல் நிலைப் பள்​ளி​யில் கூடு​தல் பள்​ளிக்​கட்​டிடங்​களை திறந்​து​வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.17.65 கோடி​யில் 14 புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை கொளத்​தூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், செங்​கல்​பட்டு மாவட்டம், கிளாம்​பாக்​கம் கலைஞர் நூற்​றாண்டு பேருந்து முனை​யத்​தில், சென்னை பெருநகர் வளர்ச்​சிக் குழு​மம் (சிஎம்​டிஏ) சார்பில் ரூ.18.26 கோடி செல​வில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்​பள​வில் தரை மற்​றும் மூன்று தளங்​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள கிளாம்​பாக்கம் காவல் நிலை​யத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

பள்​ளிக் கட்​டிடம்: பெரம்​பூர், மார்க்​கெட் தெரு​வில் உள்ள சென்னை பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் சிங்​காரச் சென்னை 2.0 மற்​றும் பெருநகர சென்னை மாநக​ராட்சி மூலதன நிதி​யின் கீழ், ரூ.9.74 கோடி செல​வில் 24 ஆயிரம் சதுரஅடி பரப்​பள​வில் தரை மற்​றும் மூன்று தளங்​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள கூடு​தல் பள்​ளிக் கட்​டிடத்தை திறந்து வைத்த முதல்​வர், வகுப்​பறை, கழிப்​பறை, ஆய்​வுக் கூடங்​களை பார்​வை​யிட்​டார். வகுப்​பறை​யில் மாண​வியர்​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

கிளாம்பாக்கத்தில் முதல்வர் திறந்து வைத்த புதிய காவல் நிலையம்.

புதிய கட்​டிடங்​களுக்கு அடிக்​கல்: சிஎம்​டிஏ சார்​பில் கொளத்​தூரில் ரூ.11.37 கோடி மதிப்​பில் 29,514 சதுர அடி பரப்​பில் தரை மற்​றும் 4 தளங்​களு​டன் புதிய காவல் துணை ஆணை​யர் அலு​வல​கம், பெர​வள்​ளூர் காவல் நிலை​யம், சட்​டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, சைபர் குற்​றப்​பிரிவுக் கட்​டிடம், கொளத்​தூர், ரெட்​டேரி​யில் ரூ.1.62 கோடி​யில் குளிரூட்​டப்​பட்ட பேருந்து நிறுத்​தம் ஆகியவை கட்​டப்பட உள்​ளன.

சென்னை மாநக​ராட்சி சார்​பில், கொளத்​தூர் தொகு​தி​யில் ரூ.3.27 கோடி​யில் பில்​கிங்​டன் சாலை​யில் அமைந்​துள்ள ரயில்வே ஆன்ஸ்லே வாய்க்​கால் இரு​புற​மும் தடுப்​புச்​சுவர் அமைக்​கும் பணி​கள் மற்​றும் மண்​டலம் 6-ல், ரூ.1.39 கோடி மதிப்​பில், 69-வது வார்டு, ரங்​க​சாமி தெரு மற்​றும் லோகோ ஸ்கீம் 1-வது பிர​தான சாலை​யில் அமைந்​துள்ள விளை​யாட்டு மைதானங்​கள் மற்​றும் 64, 65, 67, 69 ஆகிய வார்​டு​களில் உள்ள 9 பூங்​காக்​களை மேம்​படுத்​தும் பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன. மொத்​தம் ரூ.17.65 கோடி செலவில், 14 புதிய திட்​டப் பணி​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார்.

நலத்​திட்ட உதவி​கள்: கொளத்​தூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கொளத்​தூரில் தனியார் உடற்​ப​யிற்​சிக் கூடத்​தில் தீ விபத்து ஏற்​பட்​ட​தில் சேதமடைந்த இருசக்கர வாக​னங்​களுக்கு மாற்​றாக பாதிக்​கப்​பட்ட 3 பேருக்கு புதிய இருசக்கர வாக​னங்​களை முதல்​வர் வழங்​கி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, பி.கே.சேகர்​பாபு மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, எம்​எல் ​ஏக்​கள் தாயகம் கவி, வெற்​றியழகன், ஜோசப் சா​முவேல், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், டிஜிபி சங்​கர் ஜிவால், வீட்​டு​வச​தித்​துறை செயலர்​ காகர்​லா உஷா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x