Published : 06 Aug 2025 09:31 AM
Last Updated : 06 Aug 2025 09:31 AM

எங்களை கிண்டலடிக்கத்தான் அரசு செலவில் மேடை அமைத்துக் கொடுக்கிறார்களா? - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது பாயும் பாமக!

சில தலைவர்கள் சொந்தக் கட்சியை வளர்க்க மெனக்கிடுவார்கள். ஆனால், தங்கள் கட்சியை வளர்க்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மெனக்கிட்டு வேலை செய்வதாக உற்சாகப்படுகிறார்கள் தருமபுரி பாமக-வினர்.

தரு​மபுரி மாவட்​டத்​துக்​கான பொறுப்பு அமைச்​ச​ராக இருக்​கும் அமைச்​சர் எம்​ஆர்​கே, தரு​மபுரிக்கு வரும்​போதெல்​லாம் பாமக-​வினரை சீண்​டு​வதையே வழக்​க​மாக வைத்​திருக்​கி​றார். ஆனால், பாமக-வை தாக்​கு​வ​தாக நினைத்​துக் கொண்டு அவர் தெரிவிக்​கும் கருத்​துகளால் தங்​கள் கட்​சி​யின் வலிமை அதி​கரித்து வரு​வ​தாக​வும், வேற்​றுமை​களை மறந்து தங்​களை ஒற்​றுமைப்​படுத்தி வரு​வ​தாக​வும் மாவட்ட பாமக-​வினர் மகிழ்ந்​து​போய்ச் சொல்​கி​றார்​கள்.

ஏற்​கென​வே, தரு​மபுரி அரசு மருத்​து​வக் கல்​லூரி விழா​வில், “இப்போ ரெண்டு மாங்​கா” என பாமக-வுக்​குள் நடக்​கும் உட்​கட்சி மோதலை கிண்​டலடித்து பேசி​ய​தால் பாமக-​வினரின் ‘கரி’சனத்​துக்கு உள்​ளா​னார் எம்​ஆர்​கே. இந்த நிலை​யில், கடந்த 2-ம் தேதி ஒகேனக்​கல்​லில் நடந்த ஆடிப்​பெருக்கு விழா​வில், பாமக கவுரவ தலை​வ​ரான ஜி.கே.மணி எம்​எல்​ஏ-வை​யும் மேடை​யில் வைத்​துக்​கொண்டு பேசிய எம்​ஆர்​கே, அன்​புமணி தொடங்​கி​யிருக்​கும் உரிமை மீட்பு நடைபயணம் குறித்து தரமற்ற வார்த்​தைகளால் விமர்​சித்​தார்.

அத்​துடன், “எடப்​பாடி பழனி​சாமி ‘சுந்​தரா டிராவல்​ஸ்’ போன்ற ஒரு வண்​டி​யில் ஏறிக்​கொண்டு காமெடி பீஸ் போல மைக் செட்டை எல்​லாம் மாட்​டிக் கொண்டு திமுக ஆட்​சியை குறை சொல்​கி​றார். அதி​முக-​வின் பி டீமான பாமக தற்​போது எதற்​காக நடைபயணம் செல்​கிறது..?” என்​றெல்​லாம் அதி​முக-வை​யும் சேர்த்து வம்​புக்​கிழுத்​தார்.

எம்​ஆர்​கே-​யின் இந்​தப் பேச்சை கண்​டித்து தரு​மபுரி மேற்கு மாவட்ட பாமக துணைத் தலை​வ​ரான ஏரியூர் மந்​திரி படை​யாட்சி உள்​ளிட்​டோர் சமூக ஊடகங்​களில் கடும் கண்​டனங்​களை பதி​விட்​டனர். இதையடுத்து பென்​னாகரம் மேற்கு ஒன்​றிய திமுக செய​லா​ளர் மடம் முரு​கேசன் போலீ​ஸில் புகாரளித்​தார். உடனே பறந்து வந்த போலீஸ், மந்​திரி படை​யாட்​சியை விசா​ரணைக்​காக அள்​ளிச் சென்​றது. இதையறிந்த பாமக-​வினர் காவல் நிலை​யம் முன்பு சாலை மறியலில் ஈடு​பட்​டனர். இதையடுத்து மந்​திரியை போலீஸ் சொந்த ஜாமீனில் விடு​வித்​தது.

மந்திரி படையாட்சி, பிரகாஷ்

இதுதொடர்​பாக நம்​மிடம் பேசிய மந்​திரி படை​யாட்​சி, “ரகசிய காப்​புப் பிர​மாணம், உறு​தி​மொழி எல்​லாம் எடுத்​துக்​கொண்ட ஓர் அமைச்​சர் அரசு விழா​வில் எதைப் பேசவேண்​டும் எதைப் பேசக்​கூ​டாது என்று கூட அறி​யாமல் இருப்​பது வியப்​பாக உள்​ளது. திமுக சார்​பில் மேடை போட்டு நீங்​கள் யாரை வேண்​டு​மா​னாலும் திட்​டுங்​கள். அதற்கு நாங்​களும் பதிலடி கொடுக்​கி​றோம். அதை​விடுத்​து, ஒரு கட்​சி​யின் உள் விவ​காரங்​களை பற்​றி​யும், அதன் தலை​வரைப் பற்​றி​யும் கிண்​டலடித்​துப் பேசத்​தான் அரசு செல​வில் மேடையமைத்​துக் கொடுக்​கி​றார்​களா? நீங்​கள் இப்​படி எங்​களை சீண்​டச் சீண்​டத்​தான் எங்​கள் கட்​சி​யினர் மனக்​கசப்​பு​களை மறந்து உணர்​வுபூர்​வ​மாக ஒன்​று​பட்டு வரு​கி​றோம்” என்​றார்.

தரு​மபுரி மேற்கு மாவட்ட வன்​னியர் சங்க செய​லா​ளர் பிர​காஷ் நம்​மிடம், “தி​முக-வை​யும், அதன் தலை​வர்​களை​யும் பாமக-​வினர் மேடை போட்டு தினம் தினம் கண்​ணி​யமற்ற முறை​யில் விமர்​சித்​தால் அமைச்​சர் எம்​ஆர்கே ஏற்​றுக்​கொள்​வா​ரா? ‘மக்​களுக்​காக பாமக என்​னத்த கிழிச்​சீங்​க...’ என்​றெல்​லாம் அமைச்​சர் பேசி​யிருப்​பது அவரது பதவிக்கு அழகல்ல.

அதே​போல், எடப்​பாடி பழனி​சாமி​யின் பிரச்​சார வாக​னம் ‘சுந்​தரா டிராவல்​ஸ்’ போல இருப்​ப​தாக கிண்​டலடிக்​கி​றார். தமி​ழ​கத்​தில் ஓடும் நகரப் பேருந்​துகளில் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டவை சுந்​தரா டிராவல்ஸை விட மோச​மான நிலை​யில் உள்​ளன.

மக்​களின் உயிருடன் விளை​யாடும் அந்த சுந்​தரா டிராவல்​ஸ்​களை திமுக அரசு இயக்​கிக் கொண்​டிருப்​பதை மறந்​து​விட்டு அமைச்​சர் இப்​படிப் பேசி​யிருக்​கி​றார். அவர் பாமக-வை தொடர்ச்​சி​யாக இப்​படி கிண்​டலடிப்​ப​தால் பாமக இளைஞர்​கள் திமுக-வுக்கு எதி​ராக ஒன்று திரண்​டு​கொண்டே இருக்​கி​றார்​கள். இதன் மூலம், எம்​ஆர்கே தன்​னை​யும் அறி​யாமல் பாமக-வை வளர்த்​துக் கொண்​டிருக்​கி​றார்” என்​றார்.

ஆக, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்​தா​னாம் சுரேஷு என்ற கதை​யாக, உட்​கட்சி குழப்​பத்​தால் சோர்ந்து போய் உட்​கார்ந்​திருக்​கும் பாமக-​வினரை தனது ‘பேச்​சாற்​றலால்’ உசுப்​பி​விட்​டுக் கொண்டே இருக்​கி​றார் அமைச்​சர் எம்​ஆர்​கே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x