Published : 06 Aug 2025 05:57 AM
Last Updated : 06 Aug 2025 05:57 AM

வழக்கறிஞர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் பார் கவுன்சிலில் புகார் அளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவு

மதுரை: வழக்​கறிஞர்​கள் ஒழுங்​கீன​மாக நடந்து கொண்​டால் பார் கவுன்​சிலில் புகார் அளிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற பதிவாள​ருக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் 2020-ல் தாக்​கல் செய்த மனு​வில், “நீ​தி​மன்​றங்​களில் ஆஜராகும் வழக்​கறிஞர்​கள் பார் கவுன்​சில் விதி​களில் கூறப்​பட்​டுள்ள ஆடை கட்டுப்​பாட்டை பின்​பற்​ற​வும், நீதி​மன்ற புறக்​கணிப்​பு, ஆர்ப்​பாட்​டம் மற்​றும் வேலைநிறுத்​தங்​களில் ஈடு​படும்​போது வழக்கறிஞர்கள் கழுத்​துப்​பட்​டை, அங்கி அணிய தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும்” என்று வலி​யுறுத்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், ஏ.டி.மரியகிளாட் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிபதிகள் “வழக்​கறிஞர்​களுக்​கான ஆடை கட்​டுப்​பாடு குறித்து பார் கவுன்​சில் ஏற்​கெனவே வழி​காட்​டு​தல்​களை வகுத்​துள்​ளது.

அதில், நீதி​மன்​றங்​களில் ஆஜராகும்​போது வழக்​கறிஞர்​கள் நீதி​மன்ற மாண்​பைக் காப்​பாற்ற வேண்​டும் எனக் கூறப்​பட்​டுள்​ளது. வழக்​கறிஞர் ஒழுங்​கீன​மாக நடந்து கொண்​டால், உயர் நீதி​மன்ற பதி​வாளர் பார் கவுன்​சிலில் புகார் தெரிவிக்க வேண்​டும். மனு முடிக்​கப்​படு​கிறது" என உத்​தர​விட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x