Published : 04 Aug 2025 06:22 AM
Last Updated : 04 Aug 2025 06:22 AM

தமிழகத்தில் 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்து: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்​தில் சென்னை - செங்​கல்​பட்டு - திண்​டிவனம் - விழுப்​புரம் வழித்​தடம் உட்பட 3 வழித்​தடங்​களில் அதிவேக ரயில் போக்​கு​வரத்​துக்​காக (பி​ராந்​திய விரைவு போக்​கு​வரத்து அமைப்​புக்​காக) சாத்​தி​யக்​கூறு அறிக்கை தயாரிக்க, பாலாஜி ரயில் ரோடு சிஸ்​டம்ஸ் நிறு​வனத்​துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஒப்​பந்​தம் வழங்​கி​யுள்​ளது.

மத்​திய அரசின் பங்​களிப்​போடு, செமி ஹை ஸ்பீடு ரயில் திட்​டம் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வாயி​லாக செயல்​படுத்த தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. முதல்​கட்​ட​மாக தமிழகத்​தில் ஒரே நேரத்​தில் 3 சாத்​தி​யக்​கூறு ஆய்​வு​களை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் தொடங்​கி​யுள்​ளது.

அதன்​படி, சென்னை - செங்​கல்​பட்டு - திண்​டிவனம் - விழுப்​புரம் வரை 170 கி.மீ. தொலை​வுக்​கும்; சென்னை - காஞ்​சிபுரம் - வேலூர் வரை 140 கி.மீ. தொலை​வுக்​கும்; கோவை - திருப்​பூர் - ஈரோடு - சேலம் வரை 185 கி.மீ தொலை​வுக்​கும் வழித்​தடங்​கள் உரு​வாக்க, சாத்​தி​யக்​கூறு அறிக்கை தயாரிக்க பாலாஜி ரயில் ரோடு சிஸ்​டம்ஸ் நிறு​வனத்​துக்கு ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஒப்​பந்​தத்​தில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் திட்ட இயக்​குநர் தி.அர்ச்​சுனன் மற்​றும் பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறு​வனத்​தின் பொது மேலா​ளர் (தெற்​கு) எம்​.​ராபர்ட் ராஜசேகரன் ஆகியோர் அண்​மை​யில் கையெழுத்​திட்​டனர்.

4 மாதங்களில்.. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: திட்​ட​மிடப்​பட்ட ஒவ்​வொரு வழித்​தடங்​களுக்​கும் மாற்று வழித்தட விருப்​பங்​களை ஆலோ​சகர்​கள் ஆய்வு செய்​வார்​கள். நிலை​யங்​கள், பணிமனை​கள் மற்​றும் பிற போக்​கு​வரத்து முறை​களு​டன் எளி​தாக மாறிச் செல்​லும் இடங்​கள் ஆகியவை இதன்​மூலம் தேர்ந்​தெடுக்​கப்​படும்.

இந்த ஆய்​வானது, வழித்​தடங்​கள் தரை​யில் இயங்க வேண்​டு​மா, உயர்த்​தப்​பட்​டதாக அல்​லது சுரங்​கப்​பாதை​யில் இயங்க வேண்டு​மா, நிலத் தேவை​கள், சுற்​றுச்​சூழல் சார்ந்த பிரச்​சினை​கள் மற்​றும் தோராய​மான திட்​டச் செலவு ஆகிய​வற்​றைத் தீர்மானிக்​கும்.

இத்​தடங்​களில் அதிவேகத்​தில் ரயில் போக்​கு​வரத்​துக்​கான சூழல், மக்​களுக்​கான தேவை​கள், அதிவேக ரயில் போக்​கு​வரத்தை இயக்க தேவை​யான சாத்​தி​யக் கூறுகள் உட்பட பல்​வேறு அம்​சங்​கள் குறித்து ஆய்வு செய்​யப்​படும். பணியை தொடங்​கிய நாளி​லிருந்து அடுத்த 4 மாதங்​களில் சாத்​தி​யக்​கூறு அறிக்​கையை சமர்ப்​பிக்​க வேண்​டும்​.. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x