Last Updated : 04 Aug, 2025 10:43 AM

8  

Published : 04 Aug 2025 10:43 AM
Last Updated : 04 Aug 2025 10:43 AM

மதுரை திமுக - மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் மல்லுக்கட்டு!- கூட்டணிக்கு உள்ளேயே நடக்கும் தொடர் குத்துவெட்டு

‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்​களுக்கு முன்பு மதுரை​யில் நகர்​புறங்​களில் வசிக்​கும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்​கக் கோரி மக்​களைத் திரட்டி பேரணி நடத்​தி​னார் மதுரை​யின் மார்க்​சிஸ்ட் எம்​பி-​யான சு.வெங்​கடேசன். இதை ரசிக்​காத திமுக-​வினர், லோக்​கல் அமைச்​சரின் ஆலோ​சனைப்​படி ஆங்​காங்கே ஃபிளெக்​ஸ்​களை வைத்து சு.வெங்​கடேசனை சுளீரெனக் கண்​டித்​தனர். பதி​லுக்​கு மார்க்​சிஸ்ட்​களும் திமுக-​வினருக்கு எதி​ராக பொளேரென போஸ்​டர்​களை ஓட்​டினர். தொடர்ந்​து, திமுக மேடைகளில் சு.வெங்​கடேசனை வம்​புக்​கிழுத்து வசை​பாடினர்.

அண்​மை​யில், மதுரை மாநக​ராட்சி சொத்து வரி முறை​கேடு தொடர்​பாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​போது செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த வெங்கடேசன், “இந்த விஷ​யத்​தில் நாங்​கள் தான் முதலில் குரல் கொடுத்​தோம். அதன் அடிப்​படை​யிலேயே முதல்​வர் நடவடிக்கை எடுத்​துள்​ளார்” என்​றார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்​களுக்கு முன்​பாக, தூய்மை மாநகரங்​கள் பட்​டியலில் மதுரைக்கு கடைசி இடம் கிடைத்​திருப்​பது குறித்து அறிக்கை வெளி​யிட்ட வெங்​கடேசன், ‘மதுரை நகரத்​தின் தூய்மை மிக மோச​மாக உள்​ளது என்​ப​தில் மாற்​றுக் கருத்​தில்​லை. குறுகிய கால அரசி​யல் லாப நோக்​கத்​திற்​காக மக்​கள் நலன் தொடர்ந்து சமரசம் செய்​யப்​படு​கிறது. மதுரையை தூய்​மை​யாக நிர்​வகிப்​பது கடினமல்ல. அதற்​கான நிர்​வாகத்​திற​னும், நோக்​கத்​தின் நேர்​மை​யும் மிக முக்​கிய​மானது’ என தெரி​வித்​திருந்​தார்.

இந்த அறிக்கைதான் இப்​போது மீண்​டும் பஞ்​சா​யத்​தாகி இருக்​கிறது. இது தொடர்​பாக கடந்த 29-ம் தேதி நடந்த மாமன்​றக் கூட்​டத்​தில் பேசிய திமுக மாமன்​றக் குழு தலை​வர் மா.ஜெய​ராம், “தி​முக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்​வை​யும் சிந்தி தெருத்​தெரு​வாக உழைத்​த​தால் தான் சு.வெங்​கடேசன் எம்​பி-​யாக டெல்லி சென்று வந்து கொண்​டிருக்​கி​றார். நாடாளு​மன்​றத்​தில் பாஜக எதிர்ப்​பைத் தவிர, மதுரை மக்​கள் பிரச்​சினை​களை பற்றி அவர் என்ன பேசி​னார்?” என்​றார்.

மேயர் இந்​தி​ராணி​யும், “இந்த விஷ​யத்​தில் சு.வெங்​கடேசன் மீது எங்​களுக்​கும் வருத்​தம்தான்” என்​றார். இதற்கு மார்க்​சிஸ்ட் கவுன்​சிலர்​கள் எதிர்ப்​புத் தெரி​வித்து கோஷம் போட்​ட​தால், அவர்​களின் இருக்​கைக்கே சென்​று, “தி​முக இல்​லாமல் உங்​களால் ஜெயிக்க முடி​யு​மா?” என்று திமுக-​வினர் கேட்க, பதி​லுக்கு மார்க்​சிஸ்ட் கவுன்​சிலர்​கள், “2 தொகு​தி​களை மட்​டும் பெற்​றுக் கொண்டு தமிழ்​நாடு முழு​வதும் நாங்​களும் உங்​களுக்​காக உழைத்திருக்​கி​றோம்” என்று சொன்​னார்​கள்.

புண்​ணி​யமூர்த்தி

இது குறித்து கேட்க சு.வெங்​கடேசனை நாம் தொடர்பு கொண்ட போது “முக்​கிய வேலை​யாக இருக்​கிறேன், பிறகு பேசுகிறேன்” என்று சொல்லி இணைப்​பைத் துண்​டித்​துக் கொண்​டார்.

மார்​சிஸ்ட் கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் கணேசனிடம் இது விஷய​மாக பேசி​ய​போது “மதுரை மாநக​ராட்​சி​யின் தூய்மை நில​வரம் குறித்து மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரத்​தின் அடிப்​படை​யில்தான் சு.வெங்​கடேசன் பேசி​னாரே தவிர, அவராக எந்த விமர்​சனத்​தை​யும் வைக்கவில்லை.

மாநக​ராட்சி நிர்​வாகம் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும் என்ற எண்​ணத்​தில் நாங்​கள் சுட்​டிக்​காட்​டியதை திமுக-​வினர் தவறாக புரிந்​து​கொண்டதாகத் தெரி​கிறது. கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும் சுட்​டிக்​காட்ட வேண்​டியது எங்​களது கடமை தானே. கூட்​ட​ணி​யில் உள்ள அனை​வரது உழைப்​பும் பங்​களிப்​பும் சேர்ந்​தால் தானே 100 சதவீதம் வெற்​றி” என்​றார்.

திமுக பகு​திச் செய​லா​ளர் புண்​ணி​யமூர்த்தி நம்​மிடம், “சு.வெங்​கடேசனின் செயல்​பாடு​களும், கருத்​துகளும் சில நேரத்​தில் திமுக-வுக்கு எதி​ராகவே அமைந்​து​விடு​கிறது. மதுரை மாநக​ராட்சி தூய்மை விவ​காரத்​தில் கூட்​டத்​துக்கு வந்து கருத்​துச் சொல்​லாமல் சமூக வலை​தளத்​தில் கருத்து தெரிவிக்​கி​றார். இதை எப்​படி ஏற்​க​முடி​யும்? கூட்​ட​ணி​யில் இருந்​து​கொண்டே மக்​கள் கோரிக்கை என்ற பெயரில் ஆளுக்​கட்​சிக்கு எதி​ராகவே பேசுவது கூட்​ட​ணியை பாதிக்​கும்” என்​றார்.

இன்​னும் சில மதுரை திமுக முன்​னோடிகளோ, “முதல்​வ​ருடன் நெருக்​க​மாக இருக்​கும் வெங்​கடேசன் மதுரை திமுக-​வினருடன் அத்​தனை இணக்கமாக இல்​லை. கோட்​டை​யில் இருக்​கும் ஐஏஎஸ் அதி​காரி​கள் சிலருடன் நட்​பில் இருக்​கி​றார் வெங்​கடேசன். அந்த நட்பை பயன்​படுத்தி மதுரை சம்​பந்​தப்​பட்ட விஷ​யங்​களை முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​வ​தால் இங்​குள்ள திமுக-​வினருக்கு தேவையற்ற குடைச்​சல் வருகிறது. அதனால் அவர்​கள் கடுப்​பாகி​றார்​கள். மதுரை திமுக-​வினரும் சு.வெங்​கடேசனும் தொடர்ச்​சி​யாக மல்​யுத்​தம் நடத்தி வரு​வதற்கு இது​வும் ஒரு முக்​கிய காரணம்” என்​கிறார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x