Published : 03 Aug 2025 12:15 AM
Last Updated : 03 Aug 2025 12:15 AM
சென்னை: உடுமலைப்பேட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவத்தில், மீண்டுமொரு முறை ‘சாரி’ சொல்லி முதல்வர் ஸ்டாலின் முடித்து விட போகிறாரா என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப் பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு காவல் துறையினரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அடுத்த அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் தொடங்கி யுள்ளது. மீண்டுமொரு முறை “சாரி” சொல்லி முடித்துவிடப் போகிறாரா ஸ்டாலின்?
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: திருப்புவனம் அருகே கோயில் காவலாளி அஜித்குமாரை, காவல் விசாரணை எனும் பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, உடுமலை அருகே நடைபெற்றி ருக்கும் இச்சம்பவம் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு?
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் டில்லிபாபு: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து வனச் சரக அலுவலகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பழங்குடி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மாரிமுத்து மீது புனையப்பட்ட பொய் வழக்கில் அவரை விடுதலை செய்ததால் வனத்துறையினர் ஆத்திரத்தில் அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். வனத்துறையின் இந்த திட்டமிட்ட கொலையை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT