Published : 02 Aug 2025 05:28 AM
Last Updated : 02 Aug 2025 05:28 AM

அரசுத் திட்டங்களுக்கு ‘ஸ்டாலின்’ பெயரை பயன்படுத்த கூடாது: நீதிமன்ற உத்தரவுக்கு பாஜக வரவேற்பு

சென்னை: அரசு திட்​டங்​களுக்கு ஸ்டா​லின் பெயரை பயன்​படுத்​தக் கூடாது என்ற நீதி​மன்ற உத்தரவுக்கு தமிழக பாஜக வரவேற்பு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசால் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களுக்​கு, கட்சி விளம்பர பாணி​யில் ‘ஸ்​டா​லின்’ பெயரைப் பயன்​படுத்​தக் கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்​கள் பணத்​தில் திமுக அரசு செய்​யும் வெற்று விளம்​பரங்​களுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் முற்​றுப்​புள்ளி வைத்​துள்​ளது. அதி​முக மாநிலங்​களவை உறுப்​பினர் சி.​வி.சண்​முகம் தொடர்ந்த இவ்​வழக்​கில் கிடைத்த இந்​தத் தீர்ப்பு வரவேற்புக்குரியது.

மக்​களுக்​காக மக்​கள் வரிப்​பணத்​தில் வழங்​கப்​படும் நலத்​திட்​டங்​களில் எல்​லாம் ‘ஸ்​டா​லின்’ என்று தனது பெயரை ஸ்டிக்​கர் ஒட்​டிக்​கொள்​ளும் முதல்​வர், அரசு திட்​டங்​கள் மக்​கள் நலனை மேம்​படுத்​து​வதற்​குத்​தானே தவிர, சுய விளம்​பரத்​துக்​காக அல்ல என்​பதை இனி​யா​வது உணர​வேண்​டும்.

மேலும், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கும் வேளை​யில், பொது​மக்​கள் வரிப்​பணத்​தில் இயங்​கும் திட்​டங்​களுக்கு ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ என்று விளம்பர அரசி​யலை மனதில் வைத்து சூட்​டிய பெயரை நீதி​மன்​றத் உத்தரவுக்கு இணங்கி உடனடி​யாக நீக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x