Last Updated : 01 Aug, 2025 11:56 AM

 

Published : 01 Aug 2025 11:56 AM
Last Updated : 01 Aug 2025 11:56 AM

கவினின் உடலை ஐந்து நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்ட உறவினர்கள்

திருநெல்வேலி: நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் கவினின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

முன்னதாக, அமைச்சர் கே.என்.நேரு நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கவின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான சிறப்பு காவல் படை உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகிய இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட சுர்​ஜித், குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​ட நிலையில், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன், நெல்லை மாநகர போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது தாயை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வகணேஷின் உடலை வாங்​கு​வோம் என உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் கவினின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

முன்னதாக நேற்று, காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x