Published : 01 Aug 2025 05:59 AM
Last Updated : 01 Aug 2025 05:59 AM

தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்: அமைச்சர் சூசகம்

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பயணிகள் வாகன கண்காட்சி 2.0 சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் புதிதாக உருவாக்கப் பட்ட பேருந்துகள் மற்றும் பாகங்கள் இடம்பெற்றன. | படம்: எம்.முத்துகணேஷ் |

சென்னை: ‘தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களின் ஒற்றை கோரிக்கை காலம் கனி​யும்​போது நிறைவேற்​றப்​படும்’ என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் தெரி​வித்​தார்.

சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில், ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த பயணி​கள் வாகன கண்​காட்​சியை போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் நேற்று தொடங்கி வைத்​தார்.

அதைத் தொடர்ந்​து, புதிய ரக தனி​யார் பேருந்​துகளை பயன்​பாட்​டுக்கு தொடங்கி வைத்​து, சிறப்​பாக செயல்​பட்ட ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​களுக்கு விருதுகளை வழங்கி கவுர​வித்​தார்.

பின்​னர் அமைச்​சர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே மோட்​டார் வாகன உற்​பத்​தி​யில் முக்​கிய இடத்தை தமிழகம் பெற்​றிருக்​கிறது. இன்​றைய சூழலில் ஆம்னி பேருந்து தொழில் நடத்​து​வது சிரம​மான காரி​யம் என்​பதை நான் அறிவேன். இதனால், பல நேரங்​களில் சங்​கத்​துக்கு உறு​துணை​யாக இருப்​ப​தால் பலரால் விமர்​சிக்​கப்​பட்​டிருக்​கிறேன்.

அரசு சார்​பாக நடத்​தும் போக்​கு​வரத்​துத் துறையைப்​போல, தனி​யார் நடத்​தும் ஆம்னி பேருந்து தொழிலும் சிறப்​பாக இருக்க வேண்டும். இதை சொல்​லும் நேரத்​தில் தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களின் முக்​கிய கோரிக்​கையை நிறைவேற்​ற​வில்லை என அவர்​களுக்கு வருத்​தம் இருக்​கும்.

தற்​போதைய அரசி​யல் சூழலில் அவர்​களின் ஒரே ஒரு கோரிக்​கையை மட்​டும் நிறைவேற்ற முடியாத சூழல் இருக்​கிறது. காலம் கனிந்து வரும்​போது அது​வும் சரி செய்​யப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் ஏ.அன்​பழகன், செயலர் கே.​திரு​ஞானம், பொருளாளர் ஜே.​தாஜுதீன், தமிழ்​நாடு தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் சம்​மேளன செயலர் தர்​ம​ராஜ் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர். தனி​யார் பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்த வேண்​டும் என்​பது பேருந்து உரிமை​யாளர்​களின் நீண்​ட​நாள் கோரிக்கையாக உள்​ளது. அதை மனதில் வைத்​து​தான் அமைச்​சர் இவ்​வாறு கூறி​னார்​ என்​று கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x