Published : 01 Aug 2025 05:28 AM
Last Updated : 01 Aug 2025 05:28 AM

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக துணை வேந்​த​ராக ஆர்​.வேல்​ராஜ், 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி நியமனம் செய்​யப்​பட்​டார். இவரின் 3 ஆண்டு துணைவேந்​தர் பதவிக்​காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்​றது. எனினும், அவர் ஓய்​வு​பெறும் வயது நிறைவடையாத​தால் பேராசிரிய​ராக தொடர்ந்து பணி​யாற்றி வந்​தார். நேற்​றுடன் ஓய்வு பெற இருந்த நிலை​யில் அவர் திடீரென பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் கொடுப்​ப​தில் முறை​கேடு மற்​றும் சோலார் பேனல்​கள் அமைத்​த​தில் நிதி முறை​கேட்​டில் ஈடு​பட்​ட​தாக இவர் மீது புகார்​கள் உள்​ளன. இது தொடர்​பான விசா​ரணை​கள் நடை​பெற்று வரு​வ​தால் சிண்​டிகேட் கூட்​டத்​தின் ஒப்​புதலின்​படி வேல்​ராஜ் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஒரு​வர் ஓய்​வு​பெறும் நாளில் சஸ்​பெண்ட் செய்​யக்​கூ​டாது என தமிழக அரசு ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ளது. தற்​போது விதி​களை மீறி உயர்​கல்​வித் துறை நடவடிக்கை எடுத்​துள்​ள​தாக பேராசிரியர்​கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x