Last Updated : 30 Jul, 2025 10:07 AM

2  

Published : 30 Jul 2025 10:07 AM
Last Updated : 30 Jul 2025 10:07 AM

இபிஎஸ்ஸின் கோவை பிரச்சாரத்தில் கோட்டை விட்டதா அதிமுக? 

‘மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ என தனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி, கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து தொடங்கிய எடப்பாடியார் 16 நாட்களில் 35 தொகுதிகளை கடந்து தனது முதல்கட்ட பிராச்சாரப் பயணத்தை முடித்திருக்கிறார்.

2010 ஜூலையில் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக கோவையில் தான் தனது முதல்கட்ட பிரச்சார பொதுக்​கூட்​டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அம்மா வழியில் இபிஎஸ்ஸும் கோவை மேட்டுப்​பாளை​யத்​தி​லிருந்து சென்டிமென்டாக இப்போதைய திமுக ஆட்சியை வீழ்த்​து​வதற்கான தனது பிராச்​சாரப் பயணத்தை அதே ஜூலை மாதத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்​கி​னார். ஆட்சிக்கு எதிரான தனது பிரச்​சாரப் பயணத்தின் தொடக்கம் பிரம்​மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்​காகவும் கோவையை தொடக்கப் புள்ளியாக தேர்வு செய்தார் இபிஎஸ். படை திரட்​டு​வதில் கைதேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தன்னளவில் சுறுசுறுவென சுழன்​றார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்​டத்தில் உள்ள பத்து தொகுதி​களையும் அதிமுக கூட்டணியே அள்ளியது. அதற்குக் காரணமாக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தேர்தல் பிரச்​சா​ரத்தின் போது வேலுமணியை டார்கெட் வைத்து ஸ்டாலின் செய்த பிரச்​சா​ரத்தை எல்லாம் கண்டு​கொள்​ளாமல் அனைத்துத் தொகுதி​யிலும் அதிமுக அணிக்கு வெற்றியைக் கொடுத்​தார்கள் கோவை மக்கள். அந்த செல்வாக்கை கோவை மாவட்ட நிர்வாகிகள் இப்போதும் அப்படியே கூட்டம் கூட்டு​வதில் எதிரொலிக்கச் செய்தார்களா என்றால்... இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கோவையில் இரண்டு நாட்கள் முகாமிட்ட இபிஎஸ், மேட்டுப்​பாளையம், கவுண்​டம்​பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய தொகுதி​களில் பிரச்​சாரம் செய்தார். நடுவில், ரோடு ஷோ, நடைப்​ப​யிற்சி, கலந்துரை​யாடல் மூலமும் மக்களைச் சந்தித்​தார். இருப்​பினும் எதிர்​பார்த்த அளவுக்கு மக்களை திரட்டி நிறுத்த அதிமுக எம்எல்​ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தவறிவிட்​டார்கள். அத்தனை பேருமே, ‘எல்லாம் வேலுமணியே பார்த்​துக்​கு​வாரு’ என்ற சிந்தனையில் இருந்​து​விட்​டார்களோ என்னவோ!

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை அதிமுக-​வினர், “பொதுச்​செய​லா​ளரின் இந்த பிரச்​சாரப் பயணம் கோவையில் அதிமுக-​வினர் மத்தியில் உற்சாகத்தை வரவைத்​திருக்​கிறது என்றாலும் கோவை மாவட்​டத்தையே தன்வசப்​படுத்தி வைத்திருக்கும் அதிமுக, பொதுச்​செய​லா​ளரின் பிரச்சார பயணத்தை பிரம்​மாண்​டப்​படுத்​து​வதில் கோட்டை​விட்டு விட்டதையும் மறுக்​க​முடி​யாது. கட்சியை வைத்து சம்பா​தித்​தவர்கள், செலவுக்குப் பயந்து எதையும் செய்ய​வில்லை. மாவட்ட கட்சி அலுவலத்​துக்கு இபிஎஸ் வந்தபோதுகூட எதிர்​பார்த்த கூட்டம் இல்லை.

கடந்த முறை கோவை மாவட்​டத்தின் பத்து தொகுதி​களையும் அதிமுக கூட்டணி வென்றதுக்கு எஸ்.பி.வேலுமணியின் களப்பணியும் கோவைக்கு அவர் கொண்டு வந்த திட்டங்​களும் தான் காரணம். அதேபோல், இம்முறையும் திட்ட​மிட்டு பணிகளை தொடங்கி இருக்கும் வேலுமணி, தொகுதி வாரியாக செயல்​வீரர்கள் கூட்டங்களை நடத்தி முடித்து பூத் கமிட்​டிகளையும் முழுமையாக அமைத்து முடித்​திருக்​கி​றார். திண்ணைப் பிரச்​சா​ரங்​களின் மூலம் வாக்காளர்​களைச் சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்​துரைக்க வேண்டும் என தொண்டர்களை விரட்டிக் கொண்டே இருக்​கிறார் வேலுமணி. ஆனால், தேர்தல் பணிகளில் அவர் காட்டும் தீவிரத்தை மற்ற நிர்வாகிகள் காட்டு​வ​தில்லை.

அதிமுக எம்எல்​ஏ-க்​களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்​காமல் இருக்​கி​றார்கள். இவர்கள் அனைவருமே பொதுச்​செய​லாளர் வருகையை சீரியஸாக எடுத்துக் கொண்ட​தாகவே தெரிய​வில்லை. மெத்தனமாக இருக்கும் கோவை மாவட்ட நிர்வாகிகள் மீது இபிஎஸ் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். இல்லா​விட்டால் இம்முறை பத்துக்குப் பத்து வெற்றி சாத்தி​யமில்​லாமல் போய்விடும்” என்றனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரான அம்மன் அர்ச்​சுனன் எம்எல்​ஏ-​விடம் கேட்டதற்கு, “இபிஎஸ்​ஸுக்கு கட்சி​யினர் மட்டுமல்லாது பொதுமக்​களும் தன்னெழுச்​சியாக வந்து வரவேற்​பளித்​தனர். கோவையில் தொடங்கிய அந்த எழுச்சி தமிழகம் முழுவதும் தொடர்​கிறது. வடவள்​ளியில் கூட்டம் நடத்தப்பட்ட இடமானது அகலமான ஏரியா என்பதால் மக்கள் ஆங்காங்கே பரவலாக நின்றனர். மற்றபடி கூட்டம் கூடாமல் எல்லாம் இல்லை” என்றார்.

கோவை ரெஸ்பான்ஸை பார்த்​து​விட்டு மற்ற மாவட்டச் செயலா​ளர்​களுக்கு தலைமையி​லிருந்து கண்டிப்பான உத்​தர​வுகள் பறந்​த​தாகச் சொல்​கி​றார்கள். இதையடுத்து அந்தந்த மாவட்ட முன்னாள் மாண்​புமிகுக்கள் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி கூட்​டத்தைக் கூட்​டி​னார்​களாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x