Published : 29 Jul 2025 10:49 AM
Last Updated : 29 Jul 2025 10:49 AM

கேள்வி எழுப்பிய இளைஞரை திட்டிய சங்கராபுரம் திமுக எம்எல்ஏ - நடந்தது என்ன?

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே உறுப்பினர் சேர்க்கையில், கேள்வி எழுப்பிய இளைஞரை திட்டிய சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கிராமத்தில் சாலை வசதி செய்யாமல் உறுப்பினர் சேர்க்கைக்கு வருவது தொடர்பாக கேள்வி எழுப்பிய இளைஞரை சங்கராபுரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் திட்டினார்.

மேலும் அவரது ஆதரவாளர் மிரட்டியது போன்ற ஒரு வீடியோ வைரலானது. இந்நிலையில், இளைஞரை மிரட்டிய சங்கராபுரம் திமுக என்எல்ஏ-வுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, சமூகவலைதள பக்கத்ததில் அவர் நேற்று வெளியிட்ட பகிர்வு: கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதய சூரியனிடம், “சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?” என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்தவர்கள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர். திமுக சட்டப்பேரவை உறுப்பி னர் உதயசூரியன்,அந்த இளைஞர் களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார். உதயசூரியனின் இந்தப்போக்கு கடும் கண்டனத்திற் குரியது. இதுதான் கட்டப் பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்.

திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களி லெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள். ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி களை செய்து தராத திமுக கட் சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள். அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக கால் வைக்கும் இடங்களில் எல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல, மக்களை சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவுக்கான ஆரம்பம் இது! இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x