Published : 27 Jul 2025 08:26 AM
Last Updated : 27 Jul 2025 08:26 AM
சென்னை: விஜய் தவிர வேறு புகைப்படங்களை பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தவெக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகக் கட்சியினர் ஒருபோதும் செயல்படக் கூடாது.
தேர்தல் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை பணிகளுக்காக வீடுவீடாகச் செல்லும்போது, கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ள பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ஸ்டிக்கர் மட்டுமே ஒட்ட வேண்டும். பரப்புரை சார்ந்து அங்கீகரிக்கப்படாத பேனர் டிசைன்கள், இலச்சினைகள், வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது.
மேலும், கட்சியின் அனைத்து நிலை அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் உள்ளரங்கு மற்றும் பொதுவெளி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், கட்சி நிகழ்ச்சிகளின்போது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT