Last Updated : 25 Jul, 2025 09:53 AM

2  

Published : 25 Jul 2025 09:53 AM
Last Updated : 25 Jul 2025 09:53 AM

டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலம் பூத் கமிட்டிகளை கண்காணிக்கும் அதிமுக!

ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக கண்காணிக்கத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

2026 சட்​டமன்​றத் தேர்​தலை மனதில் வைத்து தமி​ழ​கத்​தின் அனைத்து முக்​கிய கட்​சிகளுமே கூட்​ட​ணி​களை கட்​டமைப்​பது, கட்​சி​யினரை தேர்​தலுக்கு தயார்​படுத்​து​வது என மும்​முரம் காட்டி வரு​கின்​றன. இதில், ஆளும் கட்​சி​யான திமுக-​வும் ஆண்ட கட்​சி​யான அதி​முக-​வும் மற்​றவர்​களை விட ஒருபடி மேலாகவே தேர்​தலுக்​கான ஆயத்​தப் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளன.

அதேசம​யம், பூத் கமிட்டி அமைத்​தல், அதன் செயல்​பாடு​களை ஒழுங்​குபடுத்​துதல் உள்​ளிட்ட அடிப்​படை​யான விஷ​யங்​களில் அதி​முக இன்​னும் தேக்க நிலை​யிலேயே இருக்​கிறது. ஒரு சில இடங்​களில் மாவட்​டச் செய​லா​ளர்​களே பூத் கமிட்டி விஷ​யத்​தில் ‘பொய்க் கணக்​கு’ எழு​தி​யும் கட்​சித் தலை​மை​யிடம் பொல்​லாப்​பு அடைந்​திருக்​கி​றார்​கள்.

அதி​முக பூத் கமிட்​டிகளில் இளைஞர்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்க வேண்​டும் என தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. இருந்த போதும், சரி​யான ஆட்கள் சிக்​காத இடங்​களில் 50 வயதைக் கடந்த அனுபவ​சாலிகளை​யும் பூத்​ கமிட்​டிக்​குள் திணித்து சமாளித்​திருக்​கி​றார்​கள். ஒன்​பது பேர் கொண்ட பூத் கமிட்​டி​யில் கட்​டா​யம் 3 பெண்​கள் இருக்க வேண்​டும் என்​பது அதி​முக தலை​மை​யின் உத்​தர​வு.

பூத் கமிட்​டி​யில் இருப்​பவர்​களுக்கு போட்​டோவுடன் கூடிய அடை​யாள அட்​டைகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​தக் கமிட்​டிகளில் 40 வயதுக்​குட்​பட்​ட​வர்​களை மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்ற தலை​மை​யின் உத்​தரவை பெரும்​பாலான மாவட்​டச் செய​லா​ளர்​கள் முறை​யாகப் பின்​பற்​ற​வில்லை என்​ப​தால் அடுத்த கட்​ட​மாக பூத் கமிட்​டி​யின் செயல்​பாடு​களை டிடெக்​டிவ் ஏஜென்​ஸிகள் மூலம் கண்​காணிக்​கத் தொடங்கி இருக்​கிறது தலை​மை. அதி​முக தேர்​தல் வியூக வகுப்​புக்​காக பணி​யமர்த்​தப்​பட்ட நிறு​வனங்​களிடமே இந்​தப் பொறுப்​பை​யும் ஒப்​படைத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

பூத் கமிட்டி உறுப்​பினர்​கள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட பகு​தி​யில் வாக்​காளர்​களை நேரில் சந்​தித்​துப் பேசி அவர்​களது சுய​விவரங்​களை திரட்​டு​வதுடன், அவர்​களுக்​கான பிரச்​சினை​களை​யும் கண்​டறிந்து அதை சரிசெய்​வதற்​கான பணி​களில் தங்​களை ஈடு​படுத்​திக் கொள்ள வேண்​டும். அதி​முக-வுக்கு ஆதரவு திரட்​டு​தல், வாக்​காளர் பட்​டியல் சரி​பார்த்​தல் உள்​ளிட்ட பணி​களும் பூத் கமிட்​டி​களின் பொறுப்​பில் விடப்​பட்​டுள்​ளன.

பூத் கமிட்டி செயல்​பாடு​கள் அனைத்​தை​யும் கட்​சி​யின் பிற நிர்​வாகி​கள் கண்​காணித்து வந்​தா​லும், உண்மை நில​வரத்தை உடனுக்​குடன் தலை​மைக்கு தெரிவிக்​கும் வித​மாக டிடெக்​டிவ் ஏஜென்​ஸி​யினரும் களத்​தில் இறக்​கப்​பட்​டுள்​ளனர். அடிக்​கடி பூத் கமிட்டி நிர்​வாகி​களை தொடர்பு கொள்​ளும் இவர்​கள், தலை​மைக் கழகத்​தில் இருந்து பேசுவ​தாகச் சொல்லி பூத் கமிட்​டி​யின் செயல்​பாடு​கள் குறித்து தகவல்​களை திரட்​டு​கின்​ற​னர். அவற்றை தங்​களிடம் இருக்​கும் தரவு​களைக் கொண்டு கிராஸ் செக் செய்து உறு​திப்​படுத்​திக் கொள்​கின்​ற​னர்.

இது குறித்து நம்​மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த அதி​முக தலை​மைக்​கழக பேச்​சாள​ரான தமி​ழரசன், “என்​ன​தான் ஓடி ஓடி பிரச்​சா​ரம் செய்து மக்​களை திரட்​டி​னாலும் பூத் கமிட்​டி​யினரின் செயல்​பாடு​கள் தான் தேர்​தல் வெற்​றிக்கு மிக முக்​கி​யம். அதை உணர்ந்து 234 தொகு​தி​களுக்​கும் சுமார் 65 ஆயிரம் பூத் கமிட்​டிகளை அமைத்து முடித்​திருக்​கிறது அதி​முக.

இந்​தக் கமிட்​டி​யினர் இப்​போது தின​மும் வீடு வீடாகச் சென்று வாக்​காளர் விவரங்​களை சேகரித்து வரு​கின்​ற​னர். இவர்​கள் சேகரித்​துத் தரும் தகவல்​கள் அனைத்​தும் தலை​மைக் கழகத்​துக்கு அனுப்பி வைக்​கப்​படு​கிறது. அந்​தத் தகவல்​கள் உண்​மை​தானா என்​று​தான் இப்​போது டிடெக்​டிவ் ஏஜென்ஸி ஆட்​கள் கிராஸ் செக் செய்​கி​றார்​கள்.

ஜெயலலிதா காலத்​தில், ஆட்​சி​யில் இருந்​தால் உளவுத் துறை மூல​மாக​வும் ஆட்​சி​யில் இல்​லாத போது டிடெக்​டிவ் ஏஜென்ஸி மூல​மாக​வும் வேட்​பாளர் தேர்​வு, கட்​சிக்கு பொறுப்​பாளர்​கள் நியமனம் உள்​ளிட்ட விஷ​யங்​களில் ரகசிய விசா​ரணை நடத்​து​வார். அதனடிப்​படை​யில் கட்​சி​யினருக்கு வாய்ப்​பு​கள் தேடி வரும். இப்​போது பூத் கமிட்டி விஷ​யத்​தி​லும் அவரது பாணியை அமல்​படுத்தி இருக்​கி​றார் எடப்​பாடி​யார்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x