Published : 23 Jul 2025 04:57 AM
Last Updated : 23 Jul 2025 04:57 AM

தேர்தலில் கூட்டணிக்கு வருமாறு பழனிசாமி விடுத்த அழைப்பை நிராகரித்த விஜய், சீமான்

சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி விடுத்த அழைப்பை தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் உடனே நிராகரித்தனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, ஆங்​கில நாளிதழுக்கு அளித்த பேட்​டி​யில், "தி​முகவை தோற்​கடிக்க ஒரு​மித்த எண்​ணம் கொண்ட அனைத்து கட்​சிகளும் அதி​முக​வுடன் கைகோக்க வேண்​டும்.

இது விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் மற்​றும் சீமானின் நாம் தமிழர் கட்​சிக்​கும் பொருந்​தும். இது​வரை தவெக​வுடன் எந்த பேச்​சு​வார்த்​தை​யும் நடத்​த​வில்​லை" என கூறி​யிருந்​தார். இதற்கு பதிலளிக்​கும் வகை​யில் கொள்கை விளக்க மாநாடு பற்​றிய புகைப்படம் தவெக​வின் அதி​காரப்​பூர்வ சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதில், "மாற்​றத்தை விரும்​பும் தமிழக மக்​களின் எதிர்​பார்ப்​பு​களை நிறைவேற்​றும் வகை​யில், மக்​கள் விரும்​பும் முதல்​வர் வேட்பாளர் விஜய் தலை​மை​யில் 2026-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம் மிகப் பெரிய வெற்​றியைப் பெற்​று, புதிய வரலாறு படைக்​கும்" என்று கூறப்​பட்​டுள்​ளது.

மேலும், தவெக கொள்​கைப் பரப்​புப் பொதுச்​செய​லா​ளர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எங்​களு​டைய முதல்​வர் வேட்​பாளர் தவெக தலை​வர் விஜய்​தான் என்​பதை செயற்​குழு​வில் தீர்​மான​மாக நிறைவேற்றி விட்​டோம். எங்​கள் கூட்​ட​ணியில் யாரைச் சேர்ப்​பது, யாரைத் தவிர்ப்​பது என்​பதை நாங்​கள்​தான் முடிவு செய்​வோம். டிசம்​பருக்கு பிறகு​தான் அதுகுறித்து முடிவு எடுப்​போம்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி குழப்​ப​மான மனநிலை​யில் உள்​ளார். தங்​களு​டைய கட்சி நிர்​வாகி​கள் மற்​றும் தொண்டர்​களிடையே தன்னை பெரும் தலை​வர் என்​றும், நல்ல கூட்​ட​ணியை உரு​வாக்கி விடு​வேன் என்ற தோற்​றத்​தை​யும் கட்​டமைக்​கவே இது​போல் தவறான கருத்​தைக் கூறி வரு​கிறார்.

மேலும், அதி​முக - பாஜக கூட்​டணி மக்​கள் மத்​தி​யில் எடு​ப​டாது என்​ப​தாலேயே பிரம்​மாண்ட கட்சி எங்​கள் கூட்​ட​ணிக்கு வர உள்​ளது என்​றும் கூறுகிறார்.இது​வரை யாரிட​மும் நாங்​கள் கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்தை நடத்​த​வில்​லை. எங்​கள் முதல்​வர் வேட்​பாளர் விஜய்​தான்​. இவ்​வாறு தெரிவித்​தார்​.

சீமான் திட்டவட்டம்: இதே​போல் பழனி​சாமியின் அழைப்பை நிராகரித்து விழுப்​புரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் சீமான் நேற்று கூறிய​தாவது: பாஜகவை வீழ்த்த வேண்​டும் என்று ஓர் அணி​யும், திமுக மீண்​டும் ஆட்​சிக்கு வரக்​கூ​டாது என்று மற்​றொரு அணியும் கூறுகின்​றன. திமுகவை வீழ்த்த அதி​முக​வின் அழைப்பை ஏற்​பது சரி​யா​காது.

தீமைக்கு மற்​றொரு தீமை மாற்​றா​காது. எனவே, பழனி​சாமி​யின் அழைப்பை நிராகரிக்​கிறேன். தமிழகத்​தில் ஆட்​சி​யில் இருந்தவர்​கள் மக்​களின் தேவையை நிறை வேற்றி இருந்​தால், தேசி​யக் கட்​சிகள் தமிழகத்​தில் வளர வேண்​டிய நிலை உருவாகியிருக்​காது.

காவிரி விவ​காரத்​தில் காங்​கிரஸ், பாஜக இரு கட்​சிகளுமே தமிழகத்​துக்கு எதி​ராக உள்​ளன. முல்லை பெரி​யாறு நீரைப் பெற காங்கிரஸ் தடை​யாக உள்​ளது. தமிழகத்​தில் இந்​தியை திணித்​தது, கல்​வியை மாநிலப் பட்​டியலில் இருந்து மாற்​றியது, ஜிஎஸ்டியை கொண்டு வந்​தது, நீட் தேர்​வைத் திணித்​தது, டிஎன்​பிஎஸ்சி தேர்வை யார் வேண்​டு​மா​னாலும் எழுதலாம் என்று கையெழுத்​திட்​டது, கேரளா​வில் விரட்​டப்​பட்ட அணு உலையை தமிழகத்​தில் திணித்​தது யார் என்று அனை​வருக்​கும் தெரி​யும்.

திமுக​வும், பாஜக​வும் ஒரு​வரையொரு​வர் எதிர்ப்​பது​போன்ற தோற்​றத்தை உரு​வாக்​கி, நாடகம் நடத்​துகின்​றனர். திருப்பரங்குன்றம் மலைக்கு போராடும் பாஜக, மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி எடுப்​பதை கண்​டித்து ஏன் போராட​வில்​லை. பாஜக​வுடன் நேரடி​யாக அதி​முக​வும் மறை​முக​மாக திமுக​வும் கூட்​டணி வைத்​துள்​ளன. நான் இருக்​கும் வரை தமிழகத்​தில் பாஜக வெல்​லாது. பாஜக​வுக்கு நான் ‘பி’ டீம் என்று கூறி​னால், தி​முக​தான் ‘ஏ’ டீம். மக்​களு​டன்​தான் எனது கூட்​ட​ணி. இவ்​வாறு சீமான்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x