Published : 21 Jul 2025 05:51 AM
Last Updated : 21 Jul 2025 05:51 AM

பெருகிவரும் குப்பையை கூடவா தடுக்க இயலாது? - தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் கண்டனம்

சென்னை:தமிழகத்​தில் குற்​றங்​களை தான் கட்​டுப்​படுத்த முடிய​வில்​லை​யென்​றால், பெருகி வரும் குப்​பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

நயி​னார் நாகேந்​திரன்: மத்​திய அரசால் வெளி​யிடப்​பட்ட தூய்மை நகரங்​கள் பட்​டியலில் தேசிய அளவி​லான நகரங்​களின் தரவரிசை​யில் சென்னை 38-வது இடத்​தை​யும், மதுரை 40-வது இடத்​தை​யும் பெற்​றிருப்​பது மிகுந்த கவலை​யை​யும், அதிர்ச்​சி​யை​யும் அளிக்​கிறது. தமிழகத்​தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்​களின் பட்​டியலில் முதல் 10 இடங்​களுக்​குள் வரவில்​லை.

இந்​நிலை​யில், ஆண்​டு​தோறும் தூய்​மைப் பணி​களுக்​காக பல்​லா​யிரக்​கணக்​கான கோடிகளை செல​விடு​வ​தாக திரா​விட மாடல் அரசு காட்​டிய கணக்​கு​கள் எல்​லாம் என்ன ஆனது. பெருகி வரும் குற்​றங்​களைத் தான் திமுக அரசால் கட்​டுப்​படுத்த முடி​யாது என்​றால், பெருகி வரும் குப்​பையை கூடவா தடுக்க இயலாது? திரா​விட மாடல் அரசின் திறனற்ற நிர்​வாகத்​தால் நோய்​களின் தொட்​டிலாக தமிழகம் மாறிவரு​வது மிகக் கொடுமை​யானது.

ஓ.பன்​னீர் செல்​வம்: தமிழகத்​தில் தூய்​மைப் பணி மோச​மான நிலை​யில் உள்​ளது. மத்​திய அரசின் வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற அமைச்​சகம் வெளி​யிட்ட ஆய்வு முடிவு​களின்​படி தமிழக நகரங்​கள் பின்​தங்​கிய நிலை​யில் உள்​ளன. மழைநீர் வடி​கால் பணி, பாதாள சாக்​கடை பணி, குடிநீர் குழாய்​கள் அமைக்​கும் பணி போன்​றவற்றை விரைந்து முடிக்​காத திமுக அரசின் செயலற்ற தன்​மைக்கு கண்​டனம் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

முதல்​வர் ஸ்டா​லின் கள நிலையை ஆராய்ந்​து, தமிழகத்தை தூய்​மை​யாக வைத்​திருக்​க​வும் சாலைகளை விரைந்து அமைக்​கும் பணி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேற்​கொள்ள வேண்​டும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x