Published : 20 Jul 2025 07:57 AM
Last Updated : 20 Jul 2025 07:57 AM

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கன்னியாகுமரியில் ஆலோசனை

நாகர்கோவில்: ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் ஆண்​டு​தோறும் கன்​னி​யாகுமரி விவே​கானந்த கேந்​தி​ரா​வில் ஆர்​எஸ்​எஸ் மற்​றும் விவே​கானந்த கேந்​திர நிர்​வாகி​களை சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வது வழக்​கம்.

இந்த ஆண்டு 4 நாட்​கள் சுற்​றுப் பயண​மாக நேற்று முன்​தினம் மாலை கன்​னி​யாகுமரி வந்​தார். விவே​கானந்தா கேந்​தி​ரா​வில் தங்​கி​யிருக்​கும் அவர், விவே​கானந்தா கேந்​திரா நிர்​வாகி​கள் மற்​றும் ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யுடன் நேற்று ஆலோசனை நடத்​தி​னார்.

இன்று காலை கன்​னி​யாகுமரி பகவதி அம்​மன் கோயி​லில் தரிசனம் செய்து விட்​டு, விவே​கானந்​தர் நினைவு மண்​டபத்​துக்கு செல்​கிறார். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் முக்​கிய தலை​வர்​களு​டன் அவர் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். நாளை காலை டெல்லி புறப்பட்​டு செல்​கிறார். மோகன் பாகவத் வரு​கையை முன்​னிட்​டு, கன்​னி​யாகுமரி​யில் எஸ்​.பி. ஸ்டா​லின் தலை​மை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x