Published : 19 Jul 2025 04:44 AM
Last Updated : 19 Jul 2025 04:44 AM

காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது: செல்வப்பெருந்தகை விளக்கம்

சென்னை: ​காம​ராஜர் குறித்த விவாதத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தாகி​விட்​டது என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்வப்பெருந்தகை தெரி​வித்​துள்​ளார். விரை​வில் தொடங்க உள்ள மக்​களவை கூட்​டத்​தொடரில், மக்​கள் பிரச்​சினை​கள் குறித்து குரல் எழுப்​புவது தொடர்​பாக, திமுக எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டம், கட்​சி​யின் தலை​வரும், முதல்​வரு​மான மு.க. ஸ்​டா​லின் தலை​மை​யில் சென்னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், ஸ்ரீபெரும்​புதூர் மக்​களவை தொகுதி எம்​.பி. டி.ஆர்​.​ பாலு​வுடன், ஸ்ரீபெரும்​புதூர் சட்​டப்​பேரவை தொகுதி எம்​எல்​ஏ​வும், தமிழக காங்​கிரஸ் தலை​வரு​மான செல்​வப்​பெருந்​தகை, முதல்​வர் ஸ்டா​லினை சந்​தித்து கோரிக்கை மனு அளித்​தார்.

பின்​னர் செல்​வப்​பெருந்​தகை செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் தொழிற்​சாலைகள் நிறைந்த தொகுதி ஸ்ரீபெரும்​புதூர். நாட்​டில் அதி​கம் ஜிஎஸ்டி வரி செலுத்​தும் தொகு​தி​யாக​வும் உள்​ளது. இங்கு சாலைகளை மேம்​படுத்த வேண்​டும் என்​றும், தொகுதி மக்​களின் பிரச்​சினை​களை ஊராட்சி மன்​றத் தலை​வர்​களிடம் மனு​வாக பெற்று முதல்​வரிடம் கோரிக்கை மனு​வாக கொடுத்​துள்​ளோம். அக்​கோரிக்​கைகளை நிறைவேற்​றித் தரு​வ​தாக முதல்​வர் ஸ்டா​லின் உறு​தி​யளித்​துள்​ளார்.

காம​ராஜர் குறித்த விவாதம் முடிந்​து​விட்​டது. அதற்கு நேற்றே முற்​றுப்​புள்ளி வைத்​தாகி​விட்​டது. இந்த விவ​காரத்​துக்​காக திமுக கூட்ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் விலக வேண்​டும் என அண்​ணா​மலை கூறி​யுள்​ளார். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதகதை போன்று உள்​ளது.

எங்​களை பற்றி அண்​ணா​மலைக்கு ஏன் கவலை? டெல்​லி​யில் காம​ராஜரை வீட்​டோடு வைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் அதற்​குப் பிறகு காம​ராஜருக்கு பிறந்​த​நாள் விழா எடுப்​பது போன்று ஏன் வேஷம் போடு​கிறார்​கள். பாஜக-ஆர்​எஸ்​எஸ் வேஷத்தை தமிழக மக்​கள் ஒரு​போதும் ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x