Published : 18 Jul 2025 06:10 AM
Last Updated : 18 Jul 2025 06:10 AM

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் பகு​திநேர ஆசிரியர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: பணி நிரந்​தரம் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்​தில் 10-வது நாளாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்​கள் காவல் துறை​யின​ரால் வலுக்​கட்​டாய​மாக கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

ஓவி​யம், இசை, உடற்​கல்​வி, கணினி என பல்​வேறு பாடங்​களைப் பயிற்​று​விக்க நியமிக்​கப்​பட்ட ஆசிரியர்​கள் தங்​களை பணிநிரந்தரம் செய்​யு​மாறு பலமுறை கோரிக்கை விடுத்​தும் செவி சாய்க்​காத திமுக அரசால், சுமார் 12 ஆயிரம் பகு​திநேர ஆசிரியர்​களின் எதிர்​காலம் கேள்விக்​குறி​யாகி​யுள்​ளது.

பகு​திநேர ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள் என, திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது, இதை இது​வரை நிறைவேற்​றாத​தால் போராடும் ஆசிரியர்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்து மிரட்​டு​வதும் கண்​டனத்​துக்​குரியது.

ஒவ்​வொரு போராட்​டத்​தின் போதும் அழைத்​துப் பேசி கோரிக்​கைகள் நிறைவேற்​றித் தரப்​படும் என பள்​ளிக்​கல்​வித் துறை அதி​காரிகளின் மூலம் வாக்​குறு​தி அளித்த திமுக அரசு, ஆட்சி நிறைவடை​யும் தரு​வா​யிலும் அவர்​களை பணிநிரந்​தரம் செய்ய மறுப்​பது ஒட்டுமொத்த ஆசிரியர்​களுக்​கும் இழைக்​கும் நம்​பிக்​கை துரோகம் ஆகும்.

எனவே, காவல் துறை​யின​ரால் கைது செய்​யப்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​களை எந்​த​வித நிபந்​தனை​யுமின்றி உடனடி​யாக விடுவிக்க வேண்​டும். அவர்​களின் பிர​தி​நி​தி​களை அழைத்​துப் பேசி கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x