Published : 18 Jul 2025 05:41 AM
Last Updated : 18 Jul 2025 05:41 AM

சென்னை மாநகராட்சியின் 650 பூங்காக்கள்: ரூ.75 கோடியில் 3 ஆண்டுகளுக்கு தனியார் பராமரிக்க நடவடிக்கை

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 650 பூங்​காக்​களை ரூ.75 கோடி​யில், 3 ஆண்​டு​களுக்கு பராமரிக்​கும் பணி​ தனியாரிடம் வழங்​கப்பட​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் 2021-ம் ஆண்​டுக்கு முன்பு 704 பூங்​காக்​களும், 610 விளை​யாட்டு அரங்​கு​களும் இருந்​தன. கடந்த 4 ஆண்​டு​களில் ரூ.81 கோடி​யில் 204 பூங்​காக்​கள் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்​ளன. ரூ.24 கோடி​யில் 37 பூங்​காக்​கள் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

சென்​னை​யில் தற்​போது 908 பூங்​காக்​களும், 724 விளை​யாட்டு அரங்​கு​களும் பொது​மக்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. மேலும் ரூ.8 கோடி​யில், 32 புதிய பூங்​காக்​கள் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. 2025- 26 நிதி​யாண்​டில் ரூ.60 கோடி​யில் 30 புதிய பூங்காக்கள் அமைக்​கப்பட உள்​ளன. 200-க்​கும் மேற்​பட்ட பூங்​காக்​கள் ரூ.30 கோடி​யில் மேம்​படுத்​தப்பட உள்​ளன.

மாநக​ராட்சி பூங்​காக்​கள் இதற்கு முன்பு தனி​யார் மூலம் பராமரிக்​கப்​பட்டு வந்​தது. 6 மாதங்​களுக்கு முன்பு பராமரிப்பு ஒப்​பந்​தம் முடிந்த நிலை​யில், மீண்​டும் டெண்​டர் கோரப்​பட்​டு, தற்​போது ரூ.75 கோடி செல​வில், 650 பெரிய பூங்​காக்​களை பராமரிக்​கும் பணி மீண்​டும் தனி​யாரிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் 650 பூங்​காக்​களில் தனி​யார் மூலம் பராமரிக்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஒப்​பந்த நிறு​வனங்​கள் அடுத்த 3 ஆண்​டு​களுக்கு பூங்​காக்​களை பராமரிக்​கும் பணியை மேற்​கொள்ளும். இந்த இடைப்​பட்ட 6 மாத காலத்​தில் என்​யுஎல்​எம் பணி​யாளர்​களை கொண்டு தற்​காலிக​மாக பராமரிக்​கப்​பட்டு வந்​தது.

தற்​போது வழங்​கப்​பட்​டுள்ள ஒப்​பந்​தத்​தின்​படி, தனி​யார் நிறுவன பராமரிப்​புப் பணி​களில் சுத்​தம் செய்​தல், சீரமைப்பு செய்​தல், தோட்​டக்​கலை செய்​தல், கழிப்​பறை பராமரிப்பு மற்​றும் உள்​கட்​டமைப்பு பழுது​பார்ப்பு போன்ற பணி​கள் அடங்​கும்.

மேலும், திரு​வொற்​றியூர், மாதவரம், தண்​டை​யார் பேட்டை மற்​றும் ராயபுரம் மண்​டலங்​களில் 42
பூங்​காக்​களை பராமரிக்கும் ஒப்​பந்​தம் கோரப்​பட்​டுள்​ளது என்று மாநக​ராட்சி அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x