Published : 18 Jul 2025 04:43 AM
Last Updated : 18 Jul 2025 04:43 AM

30 நாளில் 2.50 கோடி உறுப்பினர்களை சேர்க்க திமுக மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை:‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்​பில், அடுத்த 30 நாட்​களில் திமுக​வில் 2.50 கோடி உறுப்​பினர்​களைச் சேர்க்க வேண்​டும் என்று மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். தமிழகத்​தில் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இத்​தேர்​தலில் வெற்​றி​பெறும் முனைப்​பில் ஆளும் திமுக பல்​வேறு முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக கடந்த மாதம் நடை​பெற்ற பொதுக்​குழு கூட்​டத்​தில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற முன்​னெடுப்பை முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார்.

1.35 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பு: அதன்​படி, தொகு​தி​யில் ஒரு வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக உறுப்​பினர்​களாக மாற்​றும் பணி திமுக நிர்​வாகி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக, 68 ஆயிரம் டிஜிட்​டல் ஏஜென்ட்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், செயலி ஒன்​றும் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இப்​பணியை கடந்த ஜூலை 3-ம் தேதி சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். இதில் தற்​போது வரை 1.35 கோடிக்​கும் அதி​க​மான உறுப்​பினர்​கள் இணைந்​துள்​ள​தாக திமுக​வின்சமீபத்​திய அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

மக்கள் வரவேற்பதில் மகிழ்ச்சி: இந்​நிலை​யில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பை தீவிரப்​படுத்​தும் வகை​யில், மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் நேற்று காணொலி வாயி​லாக முதல்​வர் ஸ்டா​லின் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் மண், மொழி, மானம் காக்​க​வும், திரா​விட மாடல் அரசின் சாதனை​களை எடுத்​துக்​கூறி, தமிழக மக்​களை ஓரணியில் கொண்​டுவர வீடு​வீ​டாகப் பரப்​புரை மேற்​கொள்​ள​வும், திமுக​வில் அவர்​களை உறுப்​பினர்​களாக்​க​வும், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பை கடந்த 3-ம் தேதி தொடங்​கினோம்.

செல்​லும் இடங்​களில் எல்​லாம் மக்​களின் வரவேற்பு நன்​றாக உள்ளது என கேள்​விப்​படும்​போது கூடு​தல் மகிழ்ச்​சி​யாக உள்ளது. ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்​பில் உழைக்​கும் ஒவ்​வொரு திமுக உடன்​பிறப்​புக்​கும் என் தலை​தாழ்ந்த வணக்​கம். நன்​றி. நமக்கு இன்​ன​மும் 30 நாட்​கள் இருக்​கின்​றன. ஒவ்​வொரு வீட்​டிலும் குறைந்​த​பட்​சம் 10 நிமிடங்​களாவது நம் கழகத்​தினர் கலந்​துரை​யாடு​வதை நாம் உறு​தி​செய்ய வேண்​டும்.

முன்னெடுப்பின் நோக்கம்: மத்​திய பாஜக அரசு மற்​றும் அதன் கூட்​ட​ணி​யாக இயங்​கிக் கொண்​டிருக்​கும் அதி​முக உள்​ளிட்ட கட்​சிகள், தமிழகத்​துக்கு இழைத்​துள்ள, இழைக்​க​வுள்ள அநீ​தியை ஒவ்​வொரு குடும்​பத்​தினரிட​மும் எடுத்​துச் சொல்​வது​தான் இந்த முன்​னெடுப்​பின் நோக்​கம். அடுத்த 30 நாட்​களில் தமிழகத்​தில் மொத்​த​முள்ள 68 ஆயிரம் வாக்​குச்​ சாவடிகளி​லும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்​பினர்​களாகச் சேர்க்க வேண்​டும்.

நாம் உரு​வாக்​கி​யிருக்​கும் பூத் டிஜிட்​டல் ஏஜென்ட்​கள் கழகத்​துக்கு மிகப்​பெரிய சொத்​து. அவர்​களை எதிர்​வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கும், தேர்​தலைக் கடந்​தும் நாம் பயன்​படுத்​திக்​கொள்ள வேண்​டும். இது​வரை இணைக்​கப்​பட்டுள்ள உறுப்​பினர்​களின் விவரங்​கள் முழு​மை​யாக ஆய்வு செய்​யப்​படு​கின்​றன. எந்​தெந்த வாக்​குச்சாவடிகளில் நாம் வழங்​கிய நடை​முறையை சரி​யாகக் கடைபிடிக்​க​வில்​லையோ அங்​கெல்​லாம் மீண்​டும் முதலில்​ இருந்​து தொடங்​கு​வோம்​. இவ்​வாறு முதல்​வர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x