Last Updated : 17 Jul, 2025 12:40 PM

 

Published : 17 Jul 2025 12:40 PM
Last Updated : 17 Jul 2025 12:40 PM

​திருக்​கழுக்​குன்​றம் அருகே நெல் கிடங்கு அமைக்க அனுமதி தருமா அரசு? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

கீரப்பாக்கம் பகுதியில் மேற்கூரையுடன் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கு.

​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த கீரப்​பாக்​கம் கிராமத்​தில் திறந்​தவெளி​யில் உள்ள அரசு நேரடி நெல் கொள்​முதல் மற்​றும் சேமிப்பு கிடங்​கை, 10 ஏக்​கர் பரப்​பள​வில் விரிவுபடுத்தி மேற்​கூரை​யுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் ஒன்​றி​யத்​தில் 80-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் ஆயிரக்​கணக்​கான விளை நிலங்​கள் உள்​ளன. இதில், கரும்​பு, நெல் மற்​றும் பல்​வேறு காய்​கறிகள் சாகுபடிகளில் விவ​சா​யிகள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். எனினும், விவ​சா​யிகள் பெரும்​பாலும் நெற் பயிரை அதி​கள​வில் பயி​ரிட்​டுள்​ளனர்.

இவ்​வாறு பயி​ரிடப்​படும் நெல் அறு​வடைக்கு பிறகு தமிழக அரசின் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விற்​பனை செய்யப்படுகிறது. இதற்​காக, திருக்​கழுக்​குன்​றம் ஒன்​றி​யத்​தில் பல்​வேறு கிராமங்​களில் டிபிசி எனப்​படும் அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இங்​கு, விவ​சா​யிகளிட​மிருந்து பெறப்​படும் நெல் மூட்​டைகளில் பத்திரப்படுத்தி லாரி​கள் மூலம் மொத்த சேமிப்பு கிடங்​குக்கு அனுப்பப்படுகிறது.

இதற்​காக, கீரப்​பாக்​கம் பகு​தி​யில்செங்​கல்​பட்​டு-​திருக்​கழுக்​குன்​றம் செல்​லும் சாலை​யோரம் திறந்​தவெளி சேமிப்பு கிடங்கு அமைந்​துள்​ளது. இங்​கு, மேற்​கண்ட ஒன்​றி​யத்​தின் கீழ் உள்ள கிராமப்​பகு​தி​களை சேர்ந்த விவ​சா​யிகளின் நெல் சேமித்து வைக்கப்​படு​கிறது.

பின்​னர், லாரி மூலம் நெல் அரவை ஆலைகளுக்கு படிப்​படி​யாக அனுப்​பப்​படு​கிறது. இந்​நிலை​யில், கீரப்​பாக்​கம் பகு​தி​யில் அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யத்​துடன் கூடிய திறந்​தவெளி​யில் உள்ள நெல் சேமிப்பு கிடங்​கில் அடுக்கி வைக்​கப்​படும் நெல் மூட்​டைகள், தார்ப்​பாய் மூலம் மூடி பாது​காக்​கப்​பட்​டாலும், பலத்த காற்று மற்​றும் கனமழை​யின்​ போது மழை​யில் நனைந்து சேதமடை​யும் நிலை உள்​ளது.

அதனால், மேற்​கூரை​யுடன் கூடிய சேமிப்பு கிடங்​காக அமைக்க வேண்​டும் என விவ​சா​யிகள் நீண்ட கால​மாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், கீரப்​பாக்​கம் நெல் சேமிப்பு கிடங்கை 10 ஏக்​கர் பரப்​பள​வில் மேற்​கூரை​யுடன் கூடிய சுமார் 30 ஆயிரம் மெட்​ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்​காக அமைக்க, தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிப கழகம் திட்​ட​மிட்​டது.

இதற்​காக, தற்​போதுள்ள சிறியளவி​லான சேமிப்பு கிடங்​கின் அரு​கில் உள்ள நிலத்தை தேர்வு செய்​து, தேவை​யான நிதி ஒதுக்கீடு கோரி தமிழக அரசுக்கு பரிந்​துரை செய்​தது. ஆனால், இது​வரை​யில் அரசின் ஒப்​புதல் கிடைக்​காமல் உள்​ள​தால் நிலம் இருந்​தும் மேற்​கூரை​யுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க முடி​யாத நிலை உள்​ளது.

அதனால், தமிழக அரசு விவ​சா​யிகளின் கோரிக்​கையை ஏற்று மேற்​கண்ட பகு​தி​யில் சேமிப்பு கிடங்கு அமைக்க ஒப்​புதல் தர வேண்​டும் என திருக்​கழுக்​குன்​றம் ஒன்​றி​யத்தை சேர்ந்த விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்​து, விவ​சா​யிகள் கூறிய​தாவது: கீரப்​பாக்​கம் சேமிப்பு கிடங்​கில் திருக்​கழுக்​குன்​றம் ஒன்​றி​யம் மட்​டுமில்​லாமல் பல்​வேறு பகு​தி​களை சேர்ந்த விவ​சா​யிகளின் நெல்​லும் சேமிக்​கும் நிலை உள்​ளது. தேவை​யான நில வசதி​யுடன் உள்ள இந்த சேமிப்பு கிடங்கு மேற்​கூரை​யுடன் விரிவு​படுத்​தப்​பட்​டால், விவ​சா​யிகள் பயன்​பெறு​வதோடு அரும்​பாடு பட்டு அறு​வடை செய்​யப்​படும் நெல் மழை​யில் நனை​யாமல் பாது​காப்​பாக இருக்​கும்.

அதனால், மது​ராந்​தகம் அருகே சிலா​வட்​டம் பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளதை போன்​று, இங்​கும் மேற்​கூரை​யுடன் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றனர்.

இதுகுறித்​து, தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிப கழக அதி​காரி​கள் கூறிய​தாவது: கீரப்​பாக்​கத்​தில் மேற்​கூரை​யுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்​கு அமைக்க வேண்​டிய அவசி​யம் மற்​றும் அதற்​கான நிலம் மற்​றும் மாற்று நிலம் வழங்​கு​வது உட்பட பல்​வேறு பணி​களுக்​கான கோப்​பு​கள் தயாரித்​து, அரசுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. அரசின் ஒப்​புதல் கிடைத்​ததும்​, உரிய நடவடிக்​கை மேற்கொள்​ளப்​படும்​ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x