Published : 17 Jul 2025 05:41 AM
Last Updated : 17 Jul 2025 05:41 AM

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய ​வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அனு​ம​தி​யின்றி மாற்​றங்​களை செய்து வரு​வ​தால் தாம்​பரம் காவல் ஆணை​யர் அலு​வலக வாடகை கட்​டிடத்தை காலி செய்து தரக்​கோரி உரிமை​யாளர்​கள் தொடர்ந்த வழக்​கில், அரசுத் தரப்​பில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த சரத்​கு​மார், வெங்​கடேஷ், சவுத்ரி ஆகியோர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனுவில், “பு​தி​தாக உரு​வாக்​கப்​பட்ட தாம்​பரம் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்​காக, சோழிங்​கநல்​லூரில் எங்​களுக்கு சொந்தமான 4 மாடி கட்​டிடத்தை குத்​தகை அடிப்​படை​யில் வாடகைக்கு வழங்​கி​யிருந்​தோம்.

அதற்கு மாதம் ரூ.10 லட்​சத்து 14 ஆயிரத்து 300 என வாடகை நிர்​ண​யம் செய்​திருந்​தோம். கடந்த 2022 ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்​பந் ​தம் கையெழுத்​திடப்​பட்​டது. ஆனால் நாங்​கள் செய்து கொண்ட ஒப்​பந்​தப்​படி வாடகை வழங்காமல் பொதுப்​பணித் துறை​யின் வழி​காட்டி மதிப்​பீட்​டின்​படி மாதம் ரூ.6 லட்​சத்து 8 ஆயிரத்து 438 என நிர்​ண​யம் செய்து வழங்​கப்​படு​கிறது.

இதன் காரண​மாக குத்​தகைக் காலத்தை நாங்​கள் நீட்​டிக்​க​வில்​லை. தற்​போது எங்​களது அனு​ம​தி​யின்றி பல்​வேறு கட்​டு​மானப் பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர். எனவே எங்​களது கட்​டிடத்தை காலி செய்து எங்​களிடம் ஒப்​படைக்க உத்​தர​விட வேண்டும்” எனக்​கோரி​யிருந்​தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.​ராக​வாச்​சா​ரி, “ஒப்​பந்​தப்​படி வாடகை தராத​தால், ஏற்​கெனவே காலி செய்து கொடுக்க கோரியுள்ள நிலை​யில் உரிமை​யாளர்​களின் அனு​ம​தி​யின்றி பல்​வேறு மாறு​தல்​களை செய்து வரு​கின்​றனர்.

எனவே அந்த கட்டிடத்தை உடனடி​யாக காலி செய்து கொடுக்க உத்​தர​விட வேண்​டும்” என வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி, இந்த வழக்​கில் அரசுத் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x