Published : 17 Jul 2025 05:59 AM
Last Updated : 17 Jul 2025 05:59 AM

சென்னை | 6 வார்டுகளில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

கோப்புப் படம்

சென்னை: சென்​னை​யில் இன்று (ஜூலை 17) 6 வார்​டு​களில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​கள் நடை​பெற உள்​ளன.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாம், மாதவரம் மண்​டலம், 32-வது வார்​டு, சூரப்​பட்டு சந்​திப்​பு, அம்​பத்​தூர்- ரெட்​ஹில்ஸ் சாலை​யில் உள்ள ஸ்ரீவரத மஹாலில் நடை​பெற உள்​ளது.

ராயபுரம் மண்​டலம், 49-வது வார்​டு, பழைய வண்​ணாரப்​பேட்​டை, ஜி.ஏ.​சாலை​யில் உள்ள மைனா பார்ட்டி ஹால், அம்​பத்​தூர் மண்டலம், 80-வது வார்​டு, புதூர், கிழக்கு பானு நகர், ரெட்​ஹில்ஸ் சாலை, மல்​லிகா மஹால் ஆகிய இடங்​களில் நடை​பெற உள்​ளன.

மேலும், கோடம்​பாக்​கம் மண்​டலம், 130-வது வார்​டு, வடபழனி, 100 அடி சாலை​யில் உள்ள ஆர்த்தி மஹால், பெருங்​குடி மண்​டலம், பஞ்சா​யத்து அலு​வல​கச் சாலை​யில் உள்ள 184-வது வார்டு அலு​வல​கம், சோழிங்​கநல்​லூர் மண்​டலம், 192-வது வார்​டில், நீலாங்​கரை, சுகன்யா திருமண மண்​டபம் ஆகிய இடங்​களி​லும் நடை​பெற உள்​ளன.

இம்​மு​காம்​கள் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடை​பெறும். பொது​மக்​கள் தங்​கள் வார்​டு​களில் நடை​பெறும் முகாமில் பங்கேற்று பயன்​பெற வேண்​டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x