Published : 17 Jul 2025 06:19 AM
Last Updated : 17 Jul 2025 06:19 AM

ஆக.17-ல் ‘மரங்கள் மாநாடு’ - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல்

திருச்சி: ​நாம் தமிழர் கட்சி சார்​பில் ஆக.17-ம் தேதி மரங்​களின் மாநாடு நடை​பெறும் என்று அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​னார். 2018-ல் திருச்சி விமான நிலை​யத்​தில் மதி​முக, நாம் தமிழர் கட்​சி​யினர் இடையே ஏற்​பட்ட மோதல் தொடர்​பான வழக்கு விசா​ரணை திருச்சி மாவட்ட 2-வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் நேற்று நீதிபதி கோபி​நாத் முன்​னிலை​யில் நடை​பெற்​றது. இதில் சீமான் உள்​ளிட்​டோர் ஆஜராகினர். வழக்​கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்​கப்​படும் என நீதிபதி தெரிவித்தார்.

பின்னர், செய்​தி​யாளர்​களிடம் சீமான் கூறியது: விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் போராட்​டம் நடத்​திக் கொண்​டிருக்​கிறார்கள். பாஜக அரசின் கொள்​கை​களில் இருந்​து, திமுக அரசு எவ்விதத்​தி​லும் மாறு​பட​வில்​லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கலாமா? மத்​தி​யில் கூட்​டணி ஆட்​சி​யில் பங்​குபெறும் திமுக, மாநிலத்​தில் கூட்​டணி கட்​சிகளுக்கு ஆட்​சி​யில் பங்கு தரு​வ​தில்​லை.

ஒரு கோடி பேரை உறுப்​பினர்​களாக இணைத்​ துள்​ள​தாக கூறும் திமுக, வாக்​குக்கு பணம் கொடுக்​காமல் இருக்குமா? தமிழகத்தை நீங்​கள்​தான் பாது​காக்க வேண்​டும் என கருணாநி​தி​யிடம் காம​ராஜர் சொன்​ன​தாக, திமுக எம்​.பி. திருச்சி சிவா பேசி​யுள்​ளார். கருணாநிதி கையில் நாட்​டைக் கொடுப்​போம் என்று காம​ராஜர் எப்​போது சொன்​னார்? ஆடு, மாடு இல்​லாமல் மண் வளம் பெறாது. அதனால்​தான் கால்​நடை மாநாடு நடத்​தினேன். அடுத்​த​தாக ஆக.17-ம் தேதி கட்சி சார்​பில் 10 ஆயிரம் மரங்​களுக்கு மத்​தி​யில் மாநாடு நடை​பெறும். இவ்​வாறு சீமான் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x