Published : 17 Jul 2025 05:20 AM
Last Updated : 17 Jul 2025 05:20 AM

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் திமுகவில் 1.35 கோடி உறுப்பினர்கள்

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு' உறுப்​பினர் சேர்ப்பு இயக்​கம் மூலம் தமிழகம் முழு​வதும் 1 கோடியே 35 லட்​சத்து 43,103 பேர் இணைந்​துள்​ள​தாக திமுக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஜூன் மாதம் மதுரை​யில் நடை​பெற்ற திமுக பொதுக்​குழு​வில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். அப்​போது அவர் வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் உறுப்​பினர்​களை திமுக​வில் சேர்க்க நிர்​வாகி​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

தொடர்ந்​து, இதற்​காக செயலி​யும் உரு​வாக்​கப்​பட்​டது. அதன்​பின், ஜூலை 1-ம் தேதி இத்​திட்​டத்தை அறி​வித்த முதல்​வர் ஸ்டா​லின், ஜூலை 3-ம் தேதி சென்​னை, ஆழ்​வார்​பேட்​டை​யில் மக்​களை நேரடி​யாக சந்​தித்து தொடங்கி வைத்​தார். தொடர்ந்​து, கடந்த ஜூலை 10-ம் தேதி திரு​வாரூர் தொகு​திக்​குட்​பட்ட சன்​னதி தெரு​வில் முதல்​வர், மக்​களை நேரடி​யாக சந்​தித்​து, இத்​திட்​டத்​தில் உறுப்​பினர்​களை சேர்த்​தார்.

இதையடுத்​து, கடந்த 12-ம் தேதி சென்​னை​யில் திமுக தலைமை அலு​வல​கத்​தில் தகவல் தொழில்​நுட்ப அணி​யால் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள கட்​டுப்​பாட்டு அறையை முதல்​வர் திறந்து வைத்​தார். அதன்​தொடர்ச்​சி​யாக மயி​லாடு​துறை மாவட்டத்துக்குச் சென்றை முதல்​வர் ஸ்டா​லின், நேற்று மன்​னம்​பந்​தல் ஊராட்​சி, அம்​பேத்​கர் தெரு​வில் மக்​களை நேரடி​யாக சந்தித்து உறுப்​பினர்​களைச் சேர்த்​தார்.

இந்​நிகழ்​வின்​போது, அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், சிவ.வீ.மெய்​ய​நாதன், மாவட்ட செய​லா​ளர் நிவேதா எம். முரு​கன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். முதல்​வர் ஸ்டா​லின் அழைப்பை ஏற்று இது​வரை 1 கோடியே 35 லட்​சத்து 43,103 பேர் திமுக உறுப்​பினர்​களாக இணைந்​துள்​ள​தாக திமுக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம்: இந்​நிலை​யில், ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்பு தொடர்​பாக, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்​டம் இன்று காலை 10 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் காணொலி​யில் நடை​பெறும் என்று பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் அறி​வித்​துள்​ளார். இதில், உறுப்​பினர் சேர்க்​கையை மேலும் விரைவுபடுத்​து​வது தொடர்​பாக முதல்​வர் ஆலோ​சனை​களை வழங்​கு​வார்​ என கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x