Published : 17 Jul 2025 05:06 AM
Last Updated : 17 Jul 2025 05:06 AM

கொடி கம்பங்களை அகற்றும் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு

சென்னை: தமிழகம் முழு​வதும் பொது இடங்​கள், மாநில, தேசிய நெடுஞ்​சாலைகள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு சொந்தமான இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை​ உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்​தரவை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது. அதன்​படி தமிழகம் முழு​வதும் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பாக நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் வரும் ஜூலை 24 வரை காலக்​கெடு விதித்து உத்தரவுகளை பிறப்​பித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் கொடிக்​கம்​பங்​களை அகற்ற பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மார்க்சிஸ்ட் சார்​பில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் தலை​மையி​லான அமர்​வு, 3 நீதிப​தி​கள் கொண்ட முழு அமர்வு விசாரித்து முடிவு செய்​யும் வகை​யில் தலைமை நீதிப​திக்கு பரிந்​துரைத்​தார்.

இந்​நிலை​யில் பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்ற எதிர்ப்பு தெரி​வித்து மார்க்சிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்முகம் உயர் நீதி​மன்​றத்​தில் தனி​யாக வழக்கு தொடர்ந்​துள்​ளார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

பின்னர் இன்​றைக்கு தள்ளி வைத்​தார். இந்​நிலை​யில் இந்த வழக்​கு​களை விசா​ரிக்க நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், எஸ்​.சவுந்​தர், ஆர்​.​விஜயகு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்வை அமைத்​து தலை​மை நீதிப​தி கே.ஆர்​.ஸ்ரீராம்​ உத்​தர​விட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x