Published : 16 Jul 2025 05:37 AM
Last Updated : 16 Jul 2025 05:37 AM

மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்​சி​யில் 5 பேர் உயிரிழந்த விவ​காரம் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​ய தவறி​னால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் சென்னை மெரி​னா​வில் வான் சாகச நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், 5 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தமிழகம் முழு​வதும் சோகத்தை ஏற்​படுத்​தி​யது. நிகழ்ச்​சிக்​கான போ​திய பாது​காப்பு முன்​னெச்​சரிக்கை ஏற்​பாடு​களை மேற்கொள்ளாத சென்னை காவல் ஆணை​யர் மீது நடவடிக்கை எடுக்​க கோரி வழக்​கறிஞர் எஸ்​.கே.​சாமி, தேசிய மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகாரளித்​திருந்​தார்.

புகார் மனுவை விசா​ரித்த ஆணை​யம், தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டிருந்​தது. இது​வரை அறிக்கை தாக்​கல் செய்​யாத நிலை​யில் நேற்று வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, “வரும் 6 வாரங்​களுக்​குள் தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இல்​லை​யென்​றால் மனித உரிமை ஆணைய சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும்” என குறிப்பிட்டு டிஜிபி-க்கு நோட்​டீஸ் அனுப்ப ஆணை​யம்​ உத்​தர​விட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x