Published : 16 Jul 2025 05:01 AM
Last Updated : 16 Jul 2025 05:01 AM

விவசாயிகள் மின் இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்தும் நடவடிக்கை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: ​விவ​சா​யிகள் மின் இணைப்​புக்​காக விண்​ணப்​பித்து ஆண்டு கணக்​கில் காத்​திருக்​கும் நிலை​யில், அவர்​களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு வந்த போது தமிழகத்​தில் விவ​சாய பயன்​பாட்​டுக்​கான மின் இணைப்​புக்கு விண்​ணப்​பித்து 4.50 லட்​சம் விவ​சா​யிகள் காத்​திருந்​ததனர். விவ​சா​யிகளுக்கு 2 லட்​சம் மின் இணைப்​பு​கள் வழங்​கப்​போவ​தாக அறி​வித்த திமுக அரசு அதை முறை​யாக செய்​ய​வில்​லை. நடப்​பாண்​டில் ஒரு​வருக்கு கூட மின் இணைப்பு வழங்​கப்​பட​வில்​லை.

இதற்​கான காரண​மும் திமுக அரசால் தெரிவிக்​கப்​பட​வில்​லை. மின் இணைப்பு கோரி விண்​ணப்​பித்த விவ​சா​யிகளில் 2003-ம் ஆண்​டுக்கு முன்பு விண்​ணப்​பம் செய்த விவ​சா​யிகளுக்கு மட்​டும் தான் இணைப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன்​பின் 22 ஆண்டுகளாக விண்​ணப்​பித்​தவர்​களுக்கு மின் இணைப்பு வழங்​கப்​பட​வில்​லை.

விவ​சா​யிகளுக்​காக ஒரு துரும்பை கூட கிள்​ளிப்​போட​வில்லை என்​பது தான் உண்​மை. தமிழக அரசு நினைத்​திருந்​தால், கடந்த நான்​கரை ஆண்​டு​களில் குறைந்​தது 10 லட்​சம் விவ​சா​யிகளுக்​காவது மின்​சார இணைப்பு வழங்​கி​யிருக்க முடி​யும். ஆனால், அதில் 20 சதவீதத்​துக்​கும் குறை​வாக 1.70 லட்​சம் பேருக்கு மட்​டும் தான் மின் இணைப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

விவ​சா​யிகளின் நலன்​கள் தொடர்​பாக திமுக அரசு அளித்த வாக்​குறு​தி​களில் 5 சதவீதம் கூட நிறைவேற்​றப்​பட​வில்​லை. உணவு படைக்​கும் கடவுள்​களான விவ​சா​யிகள் மீது திமுக அரசு காட்​டும் அக்​கறை இவ்​வளவு தான். கடந்த நான்​கரை ஆண்​டு​களாக தங்களுக்கு துரோகம் செய்து வரும் தி​முக அரசுக்கு வரும் தேர்​தலில் உழவர்​கள் மறக்க முடி​யாத பாடம்​ புகட்​டு​வார்​கள்​. இவ்வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

ராமதாஸை தவிர்த்த அன்புமணி: பாமக இணை பொதுச்​செய​லா​ளர் ஏ.கே.மூர்த்தி மகன் நிச்​சய​தார்த்த விழா, சென்னை கிண்டி​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று முன்​தினம் மாலை நடந்​தது. இதில் மகள் காந்​தி​ம​தி, மனைவி சரஸ்​வ​தி​யுடன் ராமதாஸ் விழா​வில் கலந்து கொண்​டார். அவர் முன்​னிலை​யில் நிச்​சய​தார்த்​தம் நடந்​தது. ஆனால், ராம​தாஸ் செல்​லும் வரை அன்புமணி வரவில்​லை.

அவர் சென்ற அரை மணி நேரம் கழித்​து, அன்​புமணியும் சவுமியாவும் வந்​தனர். விழா​வில் பங்​கேற்ற கட்சி​யின் கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி அன்​புமணியை சந்​தித்​தார். இரு​வரும் நலம் விசா​ரித்து பேசிக் கொண்​டனர். ஆனால், ராம​தாஸ், அன்​புமணி சந்​தித்து பேசுவார்​கள் என்று நினைத்திருந்த தொண்​டர்​கள்​ ஏமாற்​றம்​ அடைந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x