Published : 15 Jul 2025 05:07 AM
Last Updated : 15 Jul 2025 05:07 AM

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு செப்.4-ல் மாநாடு: டிடிவி தினகரன், சசிகலாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக்​குழு சார்​பில் மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநில அளவி​லான மாநாடு நடை​பெறும். இதில் பங்​கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோ​ருக்கு அழைப்பு விடுக்​கப்​படும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார்.

அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு​வின் தலை​மைக் கழக செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் மூத்த தலை​வர் பண்​ருட்டி ராமச்​சந்​திரன் தலை​மை​யில் சென்னை வேப்​பேரி​யில் உள்ள ஒய்​எம்​சிஏ அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில், 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கிவரும் நிலை​யில், அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. இக்​கூட்​டத்​தில் முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசும்​போது, "மதுரை மாநாட்​டில் தொண்​டர்​கள் எதிர்​பார்க்​கும் முடிவை அறி​விப்​போம். கட்சி நிர்​வாகி​கள் யாரும் எதிரணி​யினரை விமர்​சிப்​பதை தவிர்க்க வேண்​டும்" என்​றார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநிலம் தழு​விய மாநாடு நடத்​தப்​படும். அதில் பல முக்​கிய கொள்கை முடிவு​கள் எடுக்​கப்​படும். அது வெற்றி மாநா​டாக​வும், அதி​முக தொண்​டர்​கள் அனை​வரும் இணை​யும் மாநா​டாக​வும் இருக்​கும். மதுரை மாநாட்​டுக்கு தினகரன் மற்​றும் சசிகலா​வுக்கு அழைப்பு விடுக்​கப்​படும்.

எம்​ஜிஆர், ஜெயலலி​தா​வின் விசு​வாசமிக்க தொண்​டர்​களை ஒருங்​கிணைப்​பது​தான் எங்​கள் கொள்​கை, அதில் வெற்றி பெறு​வோம். திமுக ஆட்​சியை துடைத்து எறிய அனை​வரும் ஒருங்​கிணைய வேண்​டும் என மக்​கள் நினைக்​கின்​றனர். விஜய்க்கு எப்​போதும் எங்​கள் ஆதரவு இருக்​கும். தற்​போது வரை அவர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

புதுக்​கட்சி தொடங்​கு​வீர்​களா, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் நீடிக்​கிறீர்​களா, அதி​முகவை பாஜக விழுங்கி விடுமோ என்று செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, ‘‘எங்​களைப் பொறுத்​தவரை அதி​முக​தான் உயிர் நாடி இயக்​கம். சட்​டப்​போ​ராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. அதில் தொண்​டர்​கள் வெற்றி பெறு​வார்​கள்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 8 மாதங்​கள் உள்​ளன. எதிர்​காலத்​தில் என்ன வேண்​டு​மா​னாலும் நடக்​கலாம். அதி​முக வரலாற்றை எடுத்து பார்த்​தால் எத்​தனையோ முதலைகள் விழுங்க பார்த்​துள்​ளன. ஆனால் அது நடை​பெற​வில்​லை. அதி​முக எப்​போதும் மக்​கள் கட்​சி’’ என்​றார்.

முன்​ன​தாக பேசிய பண்​ருட்டி ராமச்​சந்​திரன் பேசும்​போது, “ஓ.பன்​னீர்​செல்​வம் யார் பின்​னாலும் செல்​லப் போவது இல்​லை. யாரை​யும் எதிர்​பார்த்து அரசி​யல் நடத்த போவ​தில்​லை. 2026 சட்​டப்​ பேர​வைத் தேர்​தல் எந்த வகை​யில் இருக்​கும் என்​பது குறித்து மாநாட்​டில் அறிவிக்​கப்​படும்” என்​றார். இக்​கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர்​கள் ஆர்​.​வைத்​திலிங்​கம், வெல்​லமண்டி நடராஜன், மனோஜ் பாண்​டியன்​ எம்​எல்​ஏ, தர்​மர்​ எம்​.பி உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x