Published : 14 Jul 2025 05:41 AM
Last Updated : 14 Jul 2025 05:41 AM

ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழப்பு: கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதி முதியவர் மரணம்

சென்னை: ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். அந்த பேருந்து மோதிய விபத்​தில் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்த முதி​ய​வர் உயி​ரிழந்​தார். 4 கார்​களும் சேதம் அடைந்​தன. அரும்​பாக்​கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரி​யாணி கடை வழி​யாக நேற்று காலை 6.10 மணி​யள​வில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்​பாக்​கத்​திலிருந்து கோயம்​பேடு நோக்கி சென்று கொண்​டிருந்​தது.

பேருந்தை தரு​மபுரி மாவட்​டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்​பவர் ஓட்​டி​னார். அப்​போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்​டது. இதையடுத்து அவர் ஸ்டீரிங்​கிலேயே மயங்கி சாய்ந்​தார். இதனால் பேருந்து கட்​டுப்​பாட்டை இழந்து தாறு​மாறாக ஓடியது. அப்​போது சாலை​யின் இடதுபுறம் நடந்து சென்று கொண்​டிருந்த சேப்​பாக்​கம், லால் முகமது தெரு​வைச் சேர்ந்த சசிகு​மார் (63) என்​பவர் மீது பஸ் எதிர்​பா​ராத வித​மாக மோதி​யது. இதில் அவர் சம்பவ இடத்​திலேயே உடல் நசுங்கி உயி​ரிழந்​தார்.

மேலும் மற்​றொரு பாத​சாரி மீதும் மோதி​யது. இதில் அவர் லேசான காயத்​துடன் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பி​னார். அதோடு மட்டுமல்​லாமல் கட்​டுப்​பாட்டை இழந்த அரசு பேருந்து முன்​னால் சென்று கொண்​டிருந்த 4 கார்​கள் மீதும் அடுத்​தடுத்து மோதி சேதத்தை ஏற்​படுத்​தி​விட்டு நின்​றது. விபத்தை ஏற்​படுத்​திய பேருந்​தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி​கள் பயத்​தில் கூக்​குரல் எழுப்​பினர்.

பின்​னர், மாரடைப்பு ஏற்​பட்ட அரசு பேருந்து ஓட்​டுநரை பேருந்து நடத்​துநர் மற்​றும் பொது​மக்​கள் இணைந்து மீட்டு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் பேருந்து ஓட்​டுநர் வேலுமணி ஏற்​கெனவே இறந்து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். இந்த விபத்து தொடர்​பாக அண்​ணாநகர் போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ பதிந்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x