Published : 14 Jul 2025 05:04 AM
Last Updated : 14 Jul 2025 05:04 AM

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை: இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான பொதுப் பிரிவு கலந்​தாய்வு இன்று (ஜூலை 14) முதல் தொடங்​கு​கிறது. முதல் சுற்​றில் 39,145 மாணவர்​கள் பங்​கேற்க உள்​ளனர். தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 417 பொறியியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்​பு​களுக்கு ஒரு லட்​சத்து 90,166 அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள் உள்​ளன.

இவற்றை நிரப்​புவதற்​கான கலந்​தாய்வு தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநரகம் மூலம் இணைய வழி​யில் நடத்​தப்​படு​கிறது. அதன்படி நடப்​பாண்டு கலந்​தாய்​வில் பங்​கேற்க 3.02 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 2 லட்​சத்து 41,641 மாணவர்​கள் கலந்தாய்​வில் பங்​கேற்க தகு​திபெற்​றனர். இவர்​களுக்​கான தரவரிசைப் பட்​டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளி​யானது.

தொடர்ந்து பொறி​யியல் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்​கியது. முதல்​கட்​ட​மாக முன்​னாள் ராணுவ வீரரின் குழந்​தைகள், மாற்​றுத் திற​னாளி​கள், விளை​யாட்​டுப் பிரிவு மாணவர்​கள் ஆகியோ​ருக்​கான சிறப்​புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11-ம் தேதி வரை நடை​பெற்​றது. சிறப்​புப்​பிரி​வில் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடங்​கள் இருந்த நிலையில், அதில் 994 இடங்​களில் மட்​டுமே நிரம்​பின. இதில் 125 இடங்​கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவி​களுக்​கான 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் நிரம்​பின.

இதையடுத்து பொதுப் பிரிவுக்​கான கலந்​தாய்வு இன்று (திங்​கள்) முதல் தொடங்​கு​கிறது. முதல் சுற்று கலந்​தாய்வு ஜூலை 26-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில் 39,145 மாணவர்​கள் பங்​கேற்க உள்​ளனர். மாணவர்​கள் தங்​களுக்கு பிடித்​த​மான கல்லூரிகளை ஜூலை 16-ம் தேதிக்​குள் தேர்வு செய்ய வேண்​டும்.

இவர்​களுக்​கான தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை ஜூலை 17-ம் தேதி காலை​யில் வெளி​யிடப்​படும். அதற்கு மறு​நாள் (ஜூலை 18) மாலை 5 மணிக்​குள் ஒப்​புதல் அளித்து மாணவர்​கள் உறுதி செய்ய வேண்​டும். அப்​போது​தான் இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்கப்​படும். மேலும், இறுதி ஒதுக்​கீடு ஆணை பெற்ற மாணவர்​கள் ஜூலை 23-ம் தேதிக்​குள் கல்​லூரி​களில் சேர வேண்​டும்.

இதற்​கிடையே கலந்​தாய்​வின்​போது விருப்​ப​மான கல்​லூரி​களை தேர்வு செய்​தல், தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை பெறு​தல், அதை உறு​தி​செய்து இறுதி ஒதுக்​கீட்டு ஆணை பெறு​வது என உரிய வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி மாணவர்​கள் செயல்பட வேண்​டும். இதுதொடர்​பான கூடு​தல் விவரங்​களை https://www.tneaonline.org/ எனும் வலைத்​தளத்​தில் அறிந்து கொள்​ளலாம். மொத்​தம் 3 சுற்றுகளாக நடை​பெறவுள்ள இந்த கலந்​தாய்வு ஆக. 20-ம் தேதி​யுடன் நிறைவு பெற​விருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x