Published : 13 Jul 2025 12:43 AM
Last Updated : 13 Jul 2025 12:43 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 11 லட்சம் பேர் பங்கேற்பு: வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

தேர்வுக் கூடம் ஒன்றில் ஆய்வு நடத்திய டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர்.

சென்னை: தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வில் 11.48 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். வினாத்​தாள் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். தேர்வு முடிவு​கள் 3 மாதங்​களில் வெளி​யிடப்​படும் என்று டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் உள்ள காலி பணி​யிடங்​கள் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​தும் போட்​டித் தேர்​வு​கள் மூலம் நிரப்​பப்​படு​கின்​றன. அதன்​படி, கிராம நிர்​வாக அலு​வலர், வனக் காப்​பாளர் உட்பட பல்​வேறு பதவி​களில் காலி​யாக உள்ள 3,935 பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழு​வதும் 3,034 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது.

தேர்வு எழுத மொத்​தம் 13.90 லட்​சம் பேர் பதிவு செய்​திருந்​தனர். அதில் 11.48 லட்​சம் (82.61%) பேர் மட்​டுமே தேர்வு எழு​தினர். 2.42 லட்​சம் பேர் தேர்வு எழுத வரவில்​லை. சென்னை எழும்​பூர் அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் அமைந்​துள்ள தேர்வு மையத்தை டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் ஆய்வு செய்​தார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: குரூப்-4 தேர்வு முடிவு​கள் அடுத்த 3 மாதங்​களில் வெளி​யிடப்​படும். இந்த ஆண்டு மொத்​தம் 7 தேர்​வு​கள் அறிவிக்​கப்​பட்​டு, அதில் 5 நடை​பெற்​றுள்​ளன. குரூப்​-2, 2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு விரை​வில் வெளி​யிடப்​படும்.

மதுரை​யில் வினாத்​தாள் வெளி​யான​தாக வந்த தகவல் தவறானது. அனைத்து வினாத்​தாள், விடைத்​தாள்​களும் காவல் துறை​யின் பாது​காப்​பு, கேமரா கண்​காணிப்​புடன் தேர்வு மையங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டன. டிஎன்​பிஎஸ்சி தேர்​வு​களில் சர்ச்​சைக்​குரிய கேள்வி​கள் கேட்​கப்​படு​வது இல்​லை. அரசி​யல் சார்ந்த சர்ச்​சைக்​குரிய கேள்வி​களை கேட்​கக்​கூ​டாது என வினாத்​தாள் தயாரிக்​கும் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்தி உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தேர்வை முடித்து வெளியே வந்​தவர்​கள், வினாத்​தாள் கடின​மாக இருந்​தாக தெரி​வித்​தனர். இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: கணிதம் தவிர்த்​து, பொது அறி​வு, தமிழ் போன்ற பகு​தி​கள் கடின​மாக இருந்​தன. வழக்​க​மாக எளி​தாக இருக்​கும் தமிழ் பகு​தி​யில் இந்த முறை 60 முதல் 70 சதவீத வினாக்​கள் பாடப் புத்​தகங்​களுக்கு வெளியே இருந்து கேட்​கப்​பட்​டன. பெரும்​பாலும் இலக்​கணம் சார்ந்த கேள்வி​களாக, சற்று விரி​வான​தாக கேட்​கப்​பட்​ட​தால், படித்து விடை எழுத அதிகநேரம் தேவைப்​பட்​டது. அதே​நேரம், பொது ஆங்​கிலத்​தில் வினாத்​தாள் எளி​தாக இருக்​கிறது. இந்த பாரபட்​சத்தை தவிர்க்க வேண்​டும்’’ என்​றனர்.

குரூப்-4 தேர்​வில் நேர்காணல் கிடை​யாது. எனவே, எழுத்து தேர்​வில் வெற்றி பெற்​றாலே அரசுப் பணி கிடைப்​பது உறு​தி. தற்​போது 3,935 ஆக அறிவிக்கப்​பட்​டுள்ள காலி பணி​யிடங்​கள் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கப்பட வாய்ப்​பு உள்​ள​தாக துறை அதிகாரிகள்​ தெரிவித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x