Published : 13 Jul 2025 12:36 AM
Last Updated : 13 Jul 2025 12:36 AM

14, 16- ம் தேதிகளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

சென்னை: ஜூலை 14, 16 தேதி​களில் பத்​திரப்​ப​திவுக்கு கூடு​தல் டோடக்​கன்​கள் வழங்​கப்​பட​வுள்​ளன.

இதுகுறித்து பதிவுத்​துறை தலை​வர் தினேஷ் பொன்​ராஜ்ஆலிவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தற்​போது ஆனி மாதத்​தில் வரும் மங்​களகர​மான நாட்​களான ஜூலை 14 மற்​றும் 16-ம் தேதி​களில் அதி​கள​வில் பத்​திரப்​ப​திவு​கள் நிகழும் என்​ப​தால், கூடு​தல் முன்​ப​திவு டோக்​கன்​கள் ஒதுக்​கும்​படி பொது​மக்​களிடம் இருந்து கோரிக்​கைள் வந்​தன.

அதன் அடிப்​படை​யில், இந்​தத் தேதி​களில் ஒரு சார் பதி​வாளர் உள்ள அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதில் 150 டோக்​கன்​களும் 2 சார்​ப​தி​வாளர் உள்ள அலு​வகங்​களுக்கு 200-க்கு பதில் 300 டோக்​கன்​களும் அதி​கள​வில் பத்​திரப்​ப​திவு நடை​பெறும் 100 அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்​ப​திவு டோக்​கன்​களும் ஏற்​கெனவே வழங்​கப்​படும் 12 தட்​கல் முன்​ப​திவு டோக்​கன்​களு​டன் கூடு​தலாக 4 தட்​கல் டோக்​கன்​களும் பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்​காக வழங்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x