Published : 12 Jul 2025 06:34 AM
Last Updated : 12 Jul 2025 06:34 AM

லெவல் கிராசிங்கில் கேட் கீப்பர்கள் மிக கவனமாக பணியாற்ற வேண்டும்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை: கடலுார் மாவட்​டம் செம்​மங்​குப்​பத்தில் பள்ளி வாக​னம் மீது பயணி​கள் ரயில் மோதிய சம்​பவத்தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்தைத் தொடர்ந்​து, தெற்கு ரயில்​வே​யில் லெவல் கிராசிங் பகு​திகளில் ரயில்வே அதி​காரி​களின் சோதனை நடை​பெற்று வரு​கிறது.

அந்​தவகை​யில், தெற்கு ரயில்​வேக்கு உட்​பட்ட கோட்​டங்​களில் ரயில்வே ‘கேட்’ உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களில் 9-ம் தேதி அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். குறிப்​பாக, அரக்​கோணம் - செங்​கல்​பட்டு தடத்​தில் ரயில்வே அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்​தி​ய​போது, திரு​மால்​பூர் அரு​கில் 40 மற்​றும் 44 ரயில் கேட்​டு​களில், இரவு பணி​யின்​போது இரண்டு கேட் கீப்​பர்​கள், தூங்​கிக்​கொண்​டிருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, கேட் கீப்​பர்​கள் ஆஷிஸ்​கு​மார், கார்த்​தி​கேயன் ஆகியோர் உடனடி​யாக பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டனர். இதைத்​தொடர்ந்​து, லெவல் கிராசிங்கில் பணி​யாற்​றும் கேட்​கீப்​பர்​கள் மிகக் கவன​மாக பணி​யாற்ற வேண்​டும் என்​றும், ரயில்வே பாது​காப்பு விதி​முறை​களை முறை​யாக பின்​பற்ற வேண்​டும் என்​றும், தவறும் பட்​சத்​தில் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் ரயில்வே நிர்​வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x