Published : 12 Jul 2025 06:18 AM
Last Updated : 12 Jul 2025 06:18 AM

மாநிலத்​தின் முதல் பிரஜை​ ஆளுநர்​தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக, அதிமுக நிர்வாகிகள்.

திருநெல்வேலி: ​மாநில ஆளுநர்​களின் அதி​காரங்​களில், முதல்​வர்​கள் தலை​யீடு இருக்​கக் கூடாது என்று மகா​ராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறி​னார். பாளை​யங்​கோட்​டை​யில் சுதந்​திரப் போராட்ட வீரர் அழகு​முத்​துக்​கோனின் 268-வது குருபூஜையை முன்​னிட்​டு, அவரது சிலைக்கு சி.பி.​ரா​தாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் அதி​முக நிர்​வாகி​கள் மாலை அணி​வித்​து, மரி​யாதை செலுத்​தினர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறிய​தாவது: மாநில முதல்​வர்​களுக்கு மகத்​தான அதி​காரங்​கள் உள்​ளன. அதை​வைத்து மக்​களுக்​கான நல்ல திட்​டங்​களை செயல்​படுத்த வேண்​டும். அதை​விடுத்​து, ஆளுநருக்கு இருக்​கும் சில அதி​காரங்​களில் முதல்​வர்​கள் தலை​யிடக் கூடாது. மாநிலத்​தின் முதல் பிரஜை​யாக ஆளுநர்​தான் உள்​ளார். நான் 4 மாநிலங்​களில் ஆளுந​ராக இருந்​திருக்​கிறேன். 2 மாநிலங்​கள் எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​கள்​தான். ஆனால், இது​போன்ற எந்​தப் பிரச்​சினை​களும் அங்கு ஏற்​பட​வில்​லை.

பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​களை நியமிக்​கும் அதி​காரம் ஆளுநரிடமே உள்​ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் அது தொடர்​பான தீர்ப்பை வழங்​கி​யுள்​ளது. தற்​போது ஒரு தீர்ப்பை மட்​டும் பெற்​றுக்​கொண்​டு, முதல்​வருக்​கு​தான் அதி​காரம் என இங்​குள்​ளவர்​கள் கூறி வரு​கின்​றனர். மாநில ஆளுநர்​களின் அதி​காரங்​களுக்​குள் முதல்​வர்​கள் தலை​யீடு இருக்​கக் கூடாது. இவ்​வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x