Published : 12 Jul 2025 05:59 AM
Last Updated : 12 Jul 2025 05:59 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,250 கனஅடியாக குறைந்தது

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 30,250 கனஅடி​யாக குறைந்​தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

மேட்​டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 35,250 கன அடி​யாக இருந்த நீர்​வரத்து மதி​யம் 30,250 கனஅடி​யாக குறைந்​தது. அணை​யில் இருந்து காவிரி ஆற்​றில் திறக்​கப்​படும் நீரின் அளவு நேற்று காலை 9 மணிக்கு விநாடிக்கு 35,000 கனஅடியி​லிருந்து 30,000 கன அடி​யாக குறைக்​கப்​பட்​டது.

கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 250 கனஅடி​ நீர் திறக்​கப்​படு​கிறது. மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் கடந்த 9-ம் தேதி காலை விநாடிக்கு 43 ஆயிரம் கனஅடி​யாக பதி​வான நீர்​வரத்து 10-ம் தேதி மதி​யம் 2 மணி​யள​வில் 32 ஆயிரம் கனஅடி​யாக குறைந்​தது. நேற்று காலை நீர்​வரத்து மேலும் குறைந்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி​யாக பதி​வானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x