Published : 12 Jul 2025 05:11 AM
Last Updated : 12 Jul 2025 05:11 AM

பொது கலந்தாய்வு மூலமாக 405 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கல்

கோப்புப் படம்

சென்னை: அரசுப் பள்​ளி​களில் பணிபுரி​யும் 405 சிறப்பு ஆசிரியர்​களுக்கு பொது கலந்​தாய்வு மூலம் விருப்ப மாறு​தல் வழங்கப்பட்டுள்​ளது. தமிழகத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை​யின்​கீழ் 37,455 அரசுப் பள்​ளி​கள் உள்​ளன. 2.25 லட்​சம் ஆசிரியர்​கள் பணிபுரிகின்​றனர். இவர்​களுக்​கான பொது மாறு​தல் கலந்​தாய்வு ஆண்​டு​தோறும் எமிஸ் தளம் வழி​யாக நடத்​தப்​படு​கிறது.

அதன்​படி, நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டின் பொது மாறு​தலுக்​கான விண்​ணப்ப பதிவு கடந்த ஜூன் 19-ல் தொடங்கி 25-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. மாநிலம் முழு​வதும் 90 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் மாறு​தல் கோரி விண்​ணப்​பித்​தனர்.

இந்​நிலை​யில், கலந்​தாய்வு கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடந்து வரு​கிறது. இதில் ஓவி​யம், இசை, தையல், உடற்​கல்வி போன்ற சிறப்பு ஆசிரியர்​களில் விருப்ப மாறு​தல் கோரி 1,640 பேர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் கலந்​தாய்வு மூல​மாக 405 சிறப்பு ஆசிரியர்​களுக்கு இடமாறு​தல் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

தொடர்ந்​து, பட்​ட​தாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்​களுக்​கான கலந்​தாய்வு நடை​பெற உள்​ளது. இதற்​கான முன்​னேற்​பாடு​களை அந்​தந்த மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர்​கள் மேற்​கொண்​டு வரு​வதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x