Published : 12 Jul 2025 05:06 AM
Last Updated : 12 Jul 2025 05:06 AM

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஜூலை 14-ம் தேதி ஆலோசனை

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், 14-ம் தேதி மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் ஆலோ​சனை நடத்த உள்​ளார். தமிழகத்​தில் 2026 தேர்​தலுக்​கான ஆயத்​தப் பணி​களை அரசி​யல் கட்​சிகள் ஏற்​கெனவே தொடங்​கி​விட்​டன. திமுக கூட்​டணி எந்த மாற்​ற​முமின்றி இயங்கி வரு​கிறது. பாஜக​வுடன் அதி​முக கூட்​டணி அமைத்​துள்ள நிலை​யில், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் இப்​போதும் பாஜக கூட்​ட​ணி​யில் இருப்​ப​தாகக் கூறி வரு​கிறார். அதி​முக​வுடன் இணை​யும் அவரது முயற்​சிகள் வெற்​றி​பெற​வில்​லை.

இதற்​கிடையே, அதி​முக​வுடன் ஓ.பன்​னீர்​செல்​வம் இணைவது தொடர்​பான கேள்விக்​கு, அது அதி​முக​வின் உட்​கட்சி விவ​காரம் என மத்​திய அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாகக் கூறி​விட்​டார். அதனால் பன்​னீர்​செல்​வத்தை அதி​முக​வில் இணைக்க பாஜக​வும் ஆர்​வம் காட்​ட​வில்லை என தெரி​கிறது.

அதி​முக​வுடன் இணைப்பு சாத்​தி​ய​மா​காத நிலை​யில், தம்மை எப்​படி வலுப்​படுத்​திக் கொள்​வது என்​பது தொடர்​பாக​வும், பாஜக கூட்​ட​ணி​யில் நீடிப்​ப​தா, வில​கு​வ​தா என முடி​வெடுக்க வேண்​டிய கட்​டா​யத்​தி​லும் பன்​னீர்​செல்​வம் உள்​ளார். இதுதொடர்​பாக ஜூலை 14-ம் தேதி மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனை கூட்​டத்தை நடத்த உள்​ளார்.

மாவட்​டச் செய​லா​ளர்​கள் சிலர், தவெக​வுடன் கூட்​டணி அமைக்க பன்​னீர்​செல்​வத்​துக்கு அழுத்தம் கொடுத்து வரு​கின்​றனர். அதனால் இந்த மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் தேர்​தல் கூட்​டணி தொடர்​பாக ஓபிஎஸ் முக்​கிய முடிவு​கள் எடுக்​கலாம் என்​ற தகவல்​ வெளி​யாகி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x