Published : 12 Jul 2025 12:25 AM
Last Updated : 12 Jul 2025 12:25 AM

அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு - முழு விவரம்

சென்னை: ‘அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான மனுக்​கள் மீது எப்​போது முடி​வு எடுக்​கப்​படும் என கால​வரம்பை குறிப்​பிட்​டு, ஜூலை 21-ம் தேதிக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக விளக்​கம் தரவேண்​டும்’ என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பாக அளிக்​கப்​பட்ட புகார்​கள் மீதான ஆரம்​பக்​கட்ட விசா​ரணையை நடத்தி முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு கால​வரம்பு நிர்​ண​யிக்க வேண்​டும். 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தயா​ராக வேண்​டி​யுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​படு​வோர், இதை தங்​களுக்கு சாதக​மாகப் பயன்​படுத்த வாய்ப்​பு உள்​ளது. இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

நீதிப​தி​கள் ஆர்​.சுப்பி​ரமணி​யன், கே.சுரேந்​தர் அமர்​வில் இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது. அப்போது நடந்த வாதம்:

பழனி​சாமி தரப்​பு: சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தேர்​தல் ஆணை​யம் விசா​ரணை நடத்தி 2 மாதங்​கள் நிறைவடைந்த பின்​னரும், இதுவரை எந்த உத்​தர​வும் பிறப்​பிக்​க​வில்​லை. இது​போன்ற வழக்​கு​களில் 3 மாதங்​களில் முடி​வெடுக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பு: இந்த விவ​காரத்​தில் 6 புகார்​கள் வந்​துள்​ளன. அவற்றை ஒவ்​வொன்​றாக பரிசீலித்து உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​படும்.

நீதிப​தி​கள்: அரசி​யல் சாசன அமைப்​பான தேர்​தல் ஆணை​யம் உரிய நேரத்​தில் உத்​தரவு பிறப்​பிக்​கா​விட்​டால் தங்​கள் அரசி​யல் சாசன கடமையை செய்ய தவறுகிறார்​கள் அல்​ல​வா? இதில் தேர்​தல் ஆணை​யம் தயக்​கம் காட்​டு​வது ​போல தெரி​கிறது. குடியரசுத் தலை​வருக்கு உச்ச நீதி​மன்​றம் கால​வரம்பு நிர்​ண​யித்​துள்ள நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் குடியரசு தலை​வரை​விட உயர்ந்​த​தா?

தேர்​தல் ஆணை​யம் தரப்பு: அரசி​யல் சாசனத்​தில் உயர்ந்த அதி​காரி, தாழ்ந்த அதி​காரி என்று யாரும் இல்​லை. அனைவரும் சமமானவர்​களே. இந்த விவ​காரத்​தில் எப்​போது முடிவு எடுக்​கப்​படும் என அதி​காரி​களை கேட்டு தெரிவிக்​கிறோம். இவ்வாறு வாதம் நடந்தது. இரு தரப்புவாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பானபுகார்​கள் மீது எப்​போது முடி​வு எடுக்​கப்​படும் என கால​வரம்பை குறிப்​பிட்டுஎழுத்​துப்​பூர்​வ​மான விளக்​கத்தை தேர்தல் ஆணையம் ஜூலை 21-க்​குள் தாக்​கல்செய்ய வேண்​டும்’’ என உத்​தர​விட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x