Last Updated : 11 Jul, 2025 01:07 PM

4  

Published : 11 Jul 2025 01:07 PM
Last Updated : 11 Jul 2025 01:07 PM

“பாமக எந்த அணியில் இணைகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” - ராமதாஸ்

ராமதாஸ்

மயிலாடுதுறை: ‘பாமக எந்த அணியில் இணைகிறதோ, அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” எனத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோரிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த உட்கட்சி பூசலால், பாமக தொண்டர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், பாமக - வன்​னியர் சங்க தஞ்​சாவூர், திரு​வாரூர் மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டம் கும்​பகோணத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பேசிய ராம​தாஸ், “தந்தை சொல்​மிக்கமந்​திரம் இல்லை. எனவே, என் பேச்சை கேட்​க​வில்லை என்​ப​தால், அவர் எனது பெயரை பயன்​படுத்​தக் கூடாது. எனது இனிஷியலை வேண்​டு​மா​னால் போட்​டுக் கொள்​ளலாம்” என்று அதிரடியாக பேசினார்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய அவர், “பாமக எந்த அணியில் இணைகிறதோ, அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். பத்திரிகையாளர்கள் யாரும் சரியாக கேள்வி கேட்பதில்லை.” என்றார்.

‘மாநாட்டில் உங்களது மகளை தலைவராக அறிவிக்க உள்ளீர்களா?’ என்ற கேள்விக்கு, ‘இதில் உண்மை இல்லை. நீங்கள் உண்மையை தவிர எல்லாமே பேசுகிறீர்கள்’ என்றார்.

‘திமுக உடன் கூட்டணியா?’ என்ற கேள்விக்கு, ‘இங்கு 10 காக்காக்கள் உள்ளன. அதில் 5 வெள்ளை காக்கா. அந்த 5 வெள்ளை காக்காக்கள் உங்களிடம் இதைச் சொன்னதா? ’ என்றார் சிரித்தபடி. அப்போது, அதிமுக உடன் கூட்டணியா?’ என்ற கேள்விக்கு, ‘இங்கே 49 கட்சிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். இன்றைக்கு யார் கட்சி ஆரம்பிக்கிறீர்கள் என்று தெரியவில்லை’ என்றார்.

‘ராமதாஸ் என்கிற உங்களது பெயரை போடக் கூடாது என்று கூறியிருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘இனிஷியல் தான் போட வேண்டும் என்று கூறினேன்’ என்றார். ‘மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி வழங்குவதில்லையே?, பாரபட்சம் காட்டுகிறது’ என்ற கேள்விக்கு, ‘இதுகுறித்து அறிக்கைகள் வெளியிட்டு இருக்கிறோம். வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது. நாங்கள் இது குறித்து வலியுறுத்துவோம். பிரதமர் என்னுடைய நண்பர். நான் கேட்டு வாங்குவேன். கேட்டால் கிடைக்கும்’ என்றார்.

கட்சியின் தலைவர் பதவியை நீங்களே எடுத்து கொண்டீர்கள், இது குறித்து தேர்தல் ஆணையத்தை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, ‘இனிமேல் எல்லாம் சரியாக, முறையாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களின் சந்தேகங்கள் போக்கப்படும்’ என்றார். ‘தற்போது நடைபெற உள்ள மாநாட்டில் அன்புமணி கலந்துகொள்வாரா?’ என்ற கேள்விக்கு, ‘போக போகத் தெரியும்’ என்று பாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x