Published : 11 Jul 2025 05:52 AM
Last Updated : 11 Jul 2025 05:52 AM

குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்: பழனிசாமி குற்றச்சாட்டு

விழுப்புரத்தில் நேற்று `ரோடு ஷோ' நடத்திய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. | படம்: எம்.சாம்ராஜ் |

விழுப்புரம்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பயணத்​தின் ஒரு பகு​தி​யாக விழுப்​புரத்​தில் நேற்று பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட பழனி​சாமி, பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: ஃபெஞ்​சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்​கொள்ளாததால் விழுப்​புரம் நகரமே தண்​ணீரில் மிதந்​தது.

அதி​முக ஆட்​சி​யில் 2 முறை கூட்​டுறவு சங்​கங்​களில் விவ​சா​யிகளின் கடன்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டன. விழுப்​புரத்​தில் தொடங்​கப்​பட்ட ஜெயலலிதா பல்​கலைக்​கழகத்தை திமுக ஆட்சி ரத்து செய்​து​விட்​டது. ரூ.1,503 கோடியி​லான கடல் நீரை குடிநீ​ராக்​கும் திட்​டத்​தை​யும் திமுக ஆட்சி ரத்து செய்​து​விட்​டது.

அறநிலை​யத் துறை மூலம் 9 கல்​லூரி​கள் தொடங்​கப்​படும் என்​கின்​றனர். கல்​லூரி​கள் அவசி​யம்​தான். ஆனால், எதிர்​காலத்​தில் அவற்​றின் வளர்ச்​சிக்கு நிதி கிடைக்​காது. எனவே​தான், அறநிலைத் துறை மூலம் கல்​லூரி​களைத் தொடங்​காமல், அரசு சார்​பில் தொடங்​கு​மாறு வலி​யுறுத்​துகிறோம்.

கடலில் பேனா சிலை வைக்க ரூ.80 கோடி, கார் பந்​த​யம் நடத்த ரூ.42 கோடி நிதி ஒதுக்​கு​கின்​றனர். ஆனால், அரசுக் கல்​லூரி​கள் தொடங்க நிதி இல்​லை​யா? தமிழகத்​தில் உள்ள 180 அரசுக் கல்​லூரி​களில் 96 கல்​லூரி​களில் முதல்​வர் பணி​யிடம் காலி​யாக உள்​ளது. இவற்​றில் பயிலும் மாணவர்​களின் நிலை என்ன? மின் கட்​ட​ணத்தை 52 சதவீதம், வீட்டு வரியை 100 சதவீத​மும், கடை வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்​ளனர். விழுப்​புரம் நகராட்​சி, அதி​முக ஆட்​சி​யில் மாநக​ராட்​சி​யாக தரம் உயர்த்​தப்​படும்.

சிறு​பான்மை மக்​களுக்கு திமுக ஆட்​சி​யில் பாது​காப்பு இல்​லை. மதுரை மாநக​ராட்​சி​யில் ரூ.200 கோடி ஊழல் நடந்​துள்​ளது. அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும், விசா​ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் ஸ்டா​லின். 2026-ல் அதி​முக மக்​களாட்​சியை நடத்​தும்.

இவ்​வாறு பழனி​சாமி பேசி​னார். தொடர்ந்​து, விக்​கிர​வாண்டி மற்​றும் திண்​டிவனத்​தில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். முன்​ன​தாக, விழுப்​புரத்​தில் விவ​சா​யிகளு​டன் கலந்​துரை​யாடிய பழனி​சாமி, நேருஜி சாலை​யில் ‘ரோடு ஷோ’ சென்று மக்​களை சந்​தித்​தார். முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம், அதி​முக கள்​ளக்​குறிச்சி மாவட்​டச் செய​லா​ளர் குமரகுரு உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x