Published : 11 Jul 2025 10:21 AM
Last Updated : 11 Jul 2025 10:21 AM

“இப்போ ரெண்டு மாங்கா!” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு எதிராக தகிக்கும் தருமபுரி பாமக

தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சொந்தக் கட்சியினர் எழுப்பி வந்த சங்கநாதம் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில் அடுத்த ரோதனையாக, பன்னீர்செல்வம் வேடிக்கையாக பேசிய பேச்சு தருமபுரி மாவட்ட பாமக-வினரை அவருக்கு எதிராக தகிக்க வைத்திருக்கிறது.

தரு​மபுரி அரசு மருத்​து​வக் கல்​லூரி பட்​டமளிப்பு விழா கடந்த 7-ம் தேதி நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், “அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், ‘நடப்​போம் நலம் பெறு​வோம்’ திட்​டத்​தின் கீழ் தரு​மபுரி​யில் 8 கிலோ மீட்​டர் தூர நடைப​யிற்​சிக்​கான பாதையை அமைத்​துத் தந்​துள்​ளார்.

மேடை​யில் அமர்ந்​திருக்​கிற தரு​மபுரி பாமக எம்​எல்​ஏ-​வான வெங்​கடேஷ்வரன் கூட அந்​தப் பாதை​யில் தின​மும் நடைப்​ப​யிற்சி மேற்​கொள்​கி​றார். ‘நடக்​கிற கால்​கள் சீதே​வி, நடக்​காத கால்​கள் மூதே​வி’ என்று பழமொழி கூறு​வார்​கள். அதைப்​போல, வெங்​கடேஷ்வரன் தின​மும் நடந்து சீதேவி ஆக ட்ரை பண்​ணுகி​றார். ஒரே கல்​லில் ரெண்டு மாங்​காய் என்​பார்​கள். இப்போ ரெண்டு மாங்​கா...” என்று கூறி பேச்சை நிறுத்​தி​விட்டு மேடை​யில் அமர்ந்​திருந்த பாமக எம்​எல்​ஏ-க்​களான ஜி.கே.மணி, வெங்​கடேஷ்வரன் ஆகி​யோரை திரும்​பிப் பார்த்து குலுங்​கிச் சிரித்​தார். அமைச்​சர் பேச்​சின் அர்த்​தத்தை புரிந்​து​கொண்டு அரங்​கில் இருந்த பலரும் சிரித்​தனர்.

வேலுச்​சாமி, பிர​காஷ்

உடனே சுதா​ரித்​துக் கொண்ட பன்​னீர், “எங்​கள் திட்​டத்தை பயன்​படுத்தி எம்​எல்ஏ மக்​களை​யும் சந்​திக்​கி​றார், நடைப​யிற்​சி​யால் தன் உடல் ஆரோக்​கி​யத்​தை​யும் பரா​மரிக்​கி​றார் என்​ப​தைத் தான் அப்​படிக் கூறினேன்” என்று பேச்சை மாற்​றி​னார். பாமக-வை பகடி செய்த அமைச்​சரின் இந்​தப் பேச்​சானது தரு​மபுரி மாவட்ட பாமக-​வினரை உசுப்​பேற்றி விட்​டுள்​ளது.

இதுபற்றி நம்​மிடம் பேசிய பாமக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான வேலுச்​சாமி, “அமைச்​சர் எம்​ஆர்​கே-​யின் இந்​தப் பேச்சு பாமக-​வினர் அனை​வ​ருக்​கும் மிகுந்த வலியைத் தந்​திருக்​கிறது. பாமக-​வில் நில​வும் பிரச்​சினை​யின் பின்​னணி​யில் திமுக இருக்​கிறது என்​பதை தொடக்​கம் முதலே கூறி வரு​கி​றோம்.

மக்​கள் விரோத, அலங்​கோல ஆட்சி தமி​ழ​கத்​தில் நடக்​கிறது. கொலை, கொள்​ளை, பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள், சட்​டம் - ஒழுங்கு சீர்​குலை​வு, விலை​வாசி உயர்​வு, விவ​சா​யிகளுக்கு எதி​ரான நடவடிக்​கை, அரசு ஊழியர்​களுக்​கான வாக்​குறு​தியை நிறை​வேற்​றாதது போன்ற காரணங்​களால் 2026 சட்​டமன்ற தேர்​தலில் திமுக படு​தோல்வி அடை​யும் நிலை​யில் உள்​ளது. இந்த நிலை​யில், திமுக தனது பண பலத்தை பயன்​படுத்தி தனது கூட்​ட​ணிக் கட்​சிகளை பலப்​படுத்​து​வது, எதிரணி​யில் வலு​வான கூட்​டணி சேர்ந்து விடாத​படி உடைப்​பது போன்ற நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளது.

அந்த வரிசை​யில் பாமக-வை உடைத்து கட்​சி​யின் வலிமையை குறைக்​கும் வேலையை திமுக தலைமை தொடங்கி அமைச்​சர்​கள் வரைக்​கும் செய்து வரு​கின்​ற​னர். ஆனால், ‘இப்போ ரெண்டு மாங்​கா’ என்று எந்த மண்​ணில் நின்று அமைச்​சர் எம்​ஆர்கே கிண்​டல் செய்​தாரோ அந்த மண்​ணில் உள்ள 5 தொகு​தி​களில் ஒன்​றில் கூட வரவிருக்​கும் தேர்​தலில் திமுக கூட்​ட​ணியை வெற்​றி​பெற விட​மாட்​டோம். வட தமி​ழ​கம் முழுக்க திமுக படு​தோல்​வியை சந்​திக்​கும். பாமக-வை பிளவுபடுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக-​வின் எண்​ணம் ஈடேறாது” என்​றார்.

இதே கருத்தை வலி​யுறுத்​திப் பேசிய தரு​மபுரி மேற்கு மாவட்ட வன்​னியர் சங்க செய​லா​ளர் பிர​காஷ், “எந்த அடிப்​படை​யில் அமைச்​சர் எம்​ஆர்கே ‘ரெண்டு மாங்​கா’ எனக் கூறுகி​றார்? திமுக-​வினர் இது​போல எங்​களை சீண்​டும்​போது​தான் பாட்​டாளிச் சொந்​தங்​களின் தேர்​தல் பணி 3 மடங்கு வேகமெடுக்​கும்.

இனி தரு​மபுரி மாவட்​டத்​தில் திமுக-வுக்கு சட்​டமன்ற உறுப்​பினர்​களே கிடைக்​காத​படி அதி தீவிர​மாக பணி​யாற்​று​வோம். தரு​மபுரி​யில் திமுக-வை ஒரு இடத்​தில் கூட பாமக வெற்​றி​பெற விடாது” என்​றார்.அவசரப்​பட்டு அப்​படி எல்​லாம் உணர்ச்​சிவசப்​பட்டு கிளம்பி விடாதீர்​கள் பாட்​டாளி​களே... எனென்​றால் உங்​களது மருத்​து​வர் அய்யா திமுக சைடிலும் கூட்​ட​ணிக்கு துண்டு போட்டு வைத்​திருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x